Ogl short stories comp bookmark tamil

ஆக்ஸ்போர்டு தமிழ் சிறுகதைப்போட்டி2018: இரண்டாம்இடம்


ஆக்ஸ்போர்டுதமிழ்2018 சிறுகதைப்போட்டி: தமிழை நான் நேசிக்கச் செய்த நிகழ்வு

சிறுகதைப்போட்டி2018, 10+ to 13 வயதுவரை,  இரண்டாம்இடம்: அ. அபிநயா

2018-ம்ஆண்டுதமிழ்வாழும்அகராதியின்சிறுகதைப்போட்டி'தமிழைநேசிக்கச்செய்தநிகழ்வு'என்றதலைப்பைக்குறித்ததாகும்.

10 வயதிற்குமேல்13 வயதுவரைஉள்ளபங்கேற்பாளர்கள், தமிழ்மொழியின்வளமையையும், அழகையும்உணரச்செய்தநிஜவாழ்வில்நடந்தசம்பவத்தைப்பகிர்ந்துக்கொள்ளஅழைக்கப்பட்டனர்.

இரண்டாம்இடத்தைப்பிடித்துள்ளகீழ்க்கொடுக்கப்பட்டுள்ளக்கதை12 வயதுடையஈடன்கார்டன்ஆங்கிலப்பள்ளி, கிருஷ்ணகிரியைச்சேர்ந்தஅ. அபிநயா அவர்களால்எழுதப்பட்டது.

நேர்மறைசிந்தனைகளைவெளிபடுத்தும்நிஜவாழ்வில்நடந்தசம்பவத்தைவிவரிப்பதனால்இந்தக்கதைநிலைநிற்கின்றது.

ஆக்ஸ்போர்டுதமிழ்வாழும்அகராதிக்குழுஅ. அபிநயா அவர்களைஅவரதுசாதனைக்காகப்பாராட்டவிரும்புகிறது.


தமிழை நான் நேசிக்க செய்த நிகழ்வு
அ. அபிநயா


கடந்த ஆண்டு 2017-ல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெல்கம் மஹாலில் திராவிட முன்னேற்றக் கழகம் இலக்கிய அணி நடத்திய பாரதிதாசனார் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் என் பள்ளியின் சார்பாக நான் கலந்து கொண்டேன் அந்த போட்டியில் கலந்து கொள்ள என்னைப் போல் பல பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர்கள் வந்தனர். நான் நினைத்தேன், நான் தான் நன்றாக பேசி பரிசை வெல்வேன் என்ற உற்சாகத்துடன் போட்டியில் கலந்து கொள்ள சென்றேன். ஆனால் அங்கு பார்த்தால் என்னைவிட அழகாகவும், அருமையாகவும், அற்புதமாகவும், தூய்மையாகவும் தமிழில் பல மாணவ மாணவியர்கள் பேசினர். அவர்கள் பேசியதை நான் கேட்கும்போது புத்துணர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. நான் அதில் பாராட்டு சான்றிதழையும் பெற்றேன். இவர்கள் எல்லாம் பேசியதை பார்த்தபோது நான் தமிழை அப்போது நேசிக்க ஆரம்பித்தேன். நான் இந்த போட்டியின் வாயிலாக நான் உணர்ந்து கொண்டது சில நேரங்களில் தோல்வி கூட அருமருந்தாய் அமையும், அன்று நான் தோல்வி அடைந்து விட்டேன் என்று கவலையே இல்லை. அந்த முதல் மூன்று இடத்தைப் பிடித்த மாணவர், மாணவியர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்தேன், இந்த நிகழ்வு தான் தமிழை நான் நேசிக்க செய்தது. இந்த நிகழ்வு தான் பல போட்டிகளில்  கலந்து கொள்ள ஆர்வத்தை தூண்டியது. இந்த நிகழ்வுக்கு மேல் நான் பல போட்டிகளில் கலந்து கொண்டேன்
ஆக்ஸ்போர்டுதமிழ்2018 சிறுகதைப்போட்டி: மாயசக்திகள்கொண்டபூனை

சிறுகதைப்போட்டி2018, 8-10 வயதுவரை, இரண்டாம்இடம்: ம.ப. சரண்யாஸ்ரீ

கீழேஉள்ளஇந்தக்கதை2018 ஆக்ஸ்போர்டுதமிழ்அகராதிசிறுகதைப்போட்டியில்இரண்டாவதுஇடத்தைப்பிடித்துள்ளது. இதில்பங்கேற்றவர்கள், 8 முதல்10 வயதிற்குஉட்பட்டவர்களும்,  'மாயசக்திகள்கொண்டபூனை'என்றதலைப்பைக்குறித்துதங்களதுகதையைசமர்ப்பிக்கவும்அழைக்கப்பட்டனர்.

இந்தக்கதைஈடன்கார்டன்ஆங்கிலப்பள்ளி, கிருஷ்ணகிரியைச்சேர்ந்த9 வயதுடையம. ப. சரண்யாஸ்ரீ அவர்களால்எழுதப்பட்டது.

எழுத்தாளரின்படைப்பாற்றலைவெளிப்படுத்தும்வண்ணமாகவும், கண்கவரும்விதமாகவும், வாசிப்பவர்களைகற்பனைஉலகத்திற்குகொண்டுசெல்லும்படியாகவும்எழுதப்பட்டபடியால்இந்தக்கதைநிலைநிற்கின்றது. இந்தக்கதை, மாயப்பூனைஎவ்வாறுகாட்டுப்பூனையிடமிருந்துகோழிக்குஞ்சுகளைக்காப்பாற்றுகின்றதுஎன்பதைப்பற்றியது. எழுத்தாளரின்கற்பனைத்திறன்பூனைக்கண்டுபிடித்தபுதுமையானதீர்வில்வெளிப்பட்டுள்ளது. இந்தக்கதைஅழகாகவும், படங்கள்மற்றும்விளக்கப்படங்களாலும்அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டுதமிழ்வாழும்அகராதிக்குழும. ப. சரண்யாஸ்ரீ அவர்களை அவரதுசாதனைக்காகப்பாராட்டவிரும்புகிறது.


மாய சக்தி கொண்ட பூனை
ம. ப. சரண்யாஸ்ரீ

  • கதாபாத்திரங்கள்
  • காட்டின் ஹீரோ- வீரன் பூனைக்குட்டி
    பூனைகுட்டியின் நண்பன் - அணில் அப்பு
  • எதிரி- காட்டுப் பூனை
  • பாதிக்கப்படுபவர்- கோழியும் குஞ்சுகளும்


ஒரு பெரிய அழகான காட்டில் வீரன் பூனைக்குட்டியும் அவன் நண்பனான அணில் அப்புவும் வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் வீரன் பூனைக்குட்டி தன் நண்பன் அணில் அப்புவை காண வந்தது. அணில் அப்பு, மரத்தின் மேல் முந்திரி பழங்களை தின்றுக் கொண்டிருந்தது.

வீரன்: பூனைக்குட்டி அணில் அப்புவிடம் "வா நாம் விளையாடப் போகலாம்"என்று கூப்பிட்டது. அணில் அப்புவும் "சரி"என்று அதனுடன் மகிழ்ச்சியுடன் சென்றது. வீரன் பூனைக்குட்டி அவர்களுடன்  வெட்டுக்கிளி நண்பர்களையும் அழைத்துக் கொள்ளலாம் என்றது. அவர்கள் இருவரும் வெட்டுக்கிளி தென்படவில்லை. பின்னர், அணில் அப்பு, வீரன் பூனைக்குட்டியை தூரமாகச் சென்று விளையாடலாம் என்று கூறியது. ஆனால் வீரன் பூனைக்குட்டி வேண்டாம் என்றுக் கூறியது. ஆனால் அணில் அப்பு அதை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது.

பின்னர், வெகுதூரம் சென்றபின் வீரன் பூனைக்குட்டி களைப்படைந்தது. போதும் இங்கேயே இருப்போம் என்று கூறியது. அப்போது அங்கே 3 குஞ்சுகளுடன் கோழி அம்மா வந்தது.

கோழி குஞ்சுகளை வீரன் பூனைக்குட்டி ரசித்துக் கொண்டே "எவ்வளவு அழகாக இருக்கிறது"என்று கூறியது. கோழியம்மா தன் குஞ்சுகளை அழைத்துக்கொண்டு எங்கோ சென்றது. அப்போது திடீர் என்று காட்டுப்பூனை வந்தது. வீரன் குட்டி பூனை, ஐயோ காட்டுப்பூனை வந்துவிட்டதே! கோழிக்குஞ்சுகளை எடுத்துச் சென்றுவிடுமே! என்று கூறியது. அப்போது அந்த கோழியம்மா எங்கே என் குழந்தை? எங்கே என் குழந்தை  என் பதறி பதறி அழுதது. அணில் அப்புவிடம் வீரன் குட்டிபூனை, அந்த காட்டுப்பூனைத்தான் எடுத்துச் சென்று இருக்கும் என்று கூறியது. இதை நாம் கோழி அம்மாவிடம் கூற வேண்டும் என்று அணில் அப்பு கூறியது. “வேண்டாம் வேண்டாம் இதை நாம் சொல்ல வேண்டாம்!” நாம் அந்த கோழிக்குஞ்சை காப்பாற்ற முயற்சி செய்வோம் என்று வீரன் குட்டிப்பூனை கூறியது. குட்டிப்பூனைக்கு மாய சக்தி தோன்றியது. பின்னர், அங்கு இருந்த மரத்துண்டு ஒன்றில் நுழைந்துக் கொண்டது வீரன் குட்டிப்பூனை அதனை உருட்டி விட்டது அணில் அப்பு, அது வேகமாக உருள தொடங்கியது.

ஒரு இடத்தில் அதில் நின்றது. அங்கு காட்டுப்பூனையின் கால்தடம் இருந்தது அதனை தொடர்ந்து வீரன் குட்டிப்பூனை சென்றது. வழியில் மஞ்சக்கிளி ஒன்று வந்தது. வீரன் குட்டிப்பூனையிடம் இங்கே என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டது. நான் கோழிகுஞ்சை தேடி காப்பாத்த வந்தேன் காட்டுப்பூனை கோழிக்குஞ்சை பிடித்து வந்துவிட்டது. கோழி அம்மா அழுதுக் கொண்டிருக்கிறது என்று கூறியது.

அதற்கு அந்த மஞ்சக்கிளி காட்டுப்பூனை  ஊருக்கு வெளியே ஒரு மரத்தில் அல்லவா இருப்பான். என்று கூறியது. ஒஹோ அப்படியா? நான் கோழிக்குஞ்சை காப்பாற்றியே ஆக வேண்டும் என்று கூறிக் கொண்டே வேகமாக சென்றது. ஜாக்கிரதையாக போ! குட்டிப்பூனை என்று மஞ்சள் கிளி கூறியது. வீரன் குட்டிப்பூனை காட்டுப்பூனை அப்பொழுது தான் வெளியில் சென்றது. உடனடியாக காட்டுப்பூனையின் மரத்தின் மீது ஏறி பொந்துக்குள் சென்று கோழிக்குஞ்சை தேடியது அதனுடைய ஒலி மட்டும் கேட்டது. அதனைத் தொடர்ந்து தேடிப் பார்த்தது. அங்கு ஒரு பொந்தில் கோழிக்குஞ்சை ஒளித்து வைத்திருந்தது. வீரன் குட்டிப்பூனை அதனை அழைத்தது. பயப்படாதே உன்னை உன் அம்மாவிடம் சேர்த்துவிடுகிறேன் என்று ஆறுதல் கூறியது. பின்னர், அங்கு வீரன் குட்டிப்பூனையின் நண்பன் அணில் அப்புவும் வந்தது. இருவரும் ஒரு கயிற்றில் கூடையை கட்டி பொந்தில் இறக்கினர். அதில் கோழிக்குஞ்சு ஏறிக்கொண்டது. அதனை மெதுவாக மேலே எடுத்தனர்.

“தூக்கு ஐலசா! தூக்கு ஐலசா! என்று பாடிக்கொண்டே எடுத்தனர். கோழிக்குஞ்சு மேலே வந்தது. அப்பொழுது காட்டுப்பூனையும் வந்துவிட்டது. அதனைக் கண்டதும் வீரன் குட்டிப்பூனை மரத்தில் இருந்து குதித்து ஓட ஆரம்பித்தது. அதன் முதுகில் கோழிக்குஞ்சு ஏறிக் கொண்டது.

காட்டுப்பூனை விடாமல் துரத்தியது. அப்போது, வீரன் குட்டிப்பூனை புத்திசாலித்தனமாக மரத்துண்டின் உள்ளே நுழைந்தது. அந்த முட்டாள் காட்டுப்பூனையும் அதில் பின்தொடர்ந்து நுழைத்துக் கொண்டது. வீரன் குட்டிப்பூனை எளிதாக உருவத்தில் சிறியதாக இருந்ததால். எளிதாக வெளியில் வந்தது. ஆனால் உருவத்தில் பெரியதான காட்டுப்பூனை அதில் சிக்கிக் கொண்டது. அதனை அப்படியே தண்ணீரில் பூனையை உருட்டி விட்டது. காட்டுப்பூனை விழுந்தது. கோழிக்குஞ்சு நாம் இப்பொழுது தப்பித்து விட்டோம் என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. பின்னர் வீரன் பூனைக்குட்டி கோழிக்குஞ்சுடைய அம்மா கோழியம்மாவிடம் கொண்டு சேர்த்தது. கோழி அம்மா ரொம்ப சந்தோஷம் அடைந்தது. வீரன் பூனைக்குட்டியின் அம்மா பூனையும், அப்பா பூனையும் அங்கே வந்தது. கோழியம்மா வீரன் பூனைக்குட்டியிடம் "நீ ரொம்ப புத்திசாலியாக இருக்கிறாய்"என்று பாராட்டியது. அம்மா பூனை, காட்டுப்பூனை உன்னை ஏதாவது செய்ததா கண்ணா என்று அக்கறையுடன் கேட்டது. இல்லையம்மா [என்று கூறி கண்ணடித்து சிரித்தது] என்று வீரன் குட்டி பூனை தன் தாய் பூனையின் கழுத்தை இறுக்கி கட்டிக்கொண்டது.

பின்னர் தன் அப்பா பூனை, அம்மா பூனையுடனும், தன் நண்பன் அணில் அப்புவுடனும் தன் இருப்பிடத்தை நோக்கி நிம்மதியுடன் சென்றது. மாய சக்தி அதனுள் மறைந்தது.

பாடல்: யார் சென்னது மியாவ் மியாவ்!

நான் தான் உங்கள் வீரன்

பூனை! மாயப் பூனை! நான் தானே!

என் கூடதான் சேர யாருக்கெல்லாம்  பிடிக்கும்?! ஜுபூம்பா!

யாருக்கெல்லாம் பிடிக்கும்?

நன்றி வணக்கம்

வாழ்க வளமுடன்