Ogl short stories comp bookmark tamil

ஆக்ஸ்போர்டு தமிழ் சிறுகதைப்போட்டி2018: மூன்றாம்இடம்


ஆக்ஸ்போர்டுதமிழ்2018 சிறுகதைப்போட்டி: தமிழை நான் நேசிக்கச் செய்த நிகழ்வு

சிறுகதைப்போட்டி2018, 10+ to 13 வயதுவரை,  மூன்றாம்இடம்: ர. ராஜேஷ்

2018-ம்ஆண்டுதமிழ்வாழும்அகராதியின்சிறுகதைப்போட்டி'தமிழைநேசிக்கச்செய்தநிகழ்வு'என்றதலைப்பைக்குறித்ததாகும்.

10 வயதிற்குமேல்13 வயதுவரைஉள்ளபங்கேற்பாளர்கள், தமிழ்மொழியின்வளமையையும், அழகையும்உணரச்செய்தநிஜவாழ்வில்நடந்தசம்பவத்தைப்பகிர்ந்துக்கொள்ளஅழைக்கப்பட்டனர்.

மூன்றாம்இடத்தைப்பிடித்துள்ளகீழ்க்கொடுக்கப்பட்டுள்ளக்கதை12 வயதுடையஎஸ்ஆர்டிப்விவேகானந்தவித்யாலயாவைச்சேர்ந்தர. ராஜேஷ் அவர்களால்எழுதப்பட்டது.

இந்தக்கதைநன்றாகவும், கம்பஇராமாயணத்தில்உள்ளநிகழ்வுகளைவாசிப்பதுபோன்றஅனுபவத்தைதரும்வகையிலும்எழுதப்பட்டப்படியினால்நிலைநிற்கின்றது. இந்தஎழுத்தாளர்கம்பருடையஇலக்கியநடையைபிரதிபலிக்கும்படிசொற்பொழிவாற்றும்தாமோதரதீட்சிதர்அவர்களின்பேச்சால்ஈர்க்கப்பட்டுள்ளார்.

ஆக்ஸ்போர்டுதமிழ்வாழும்அகராதிக்குழுர. ராஜேஷ் அவர்களைஅவரதுசாதனைக்காகப்பாராட்டவிரும்புகிறது.


தமிழ் மீது பற்று வந்ததற்கான ஈர்ப்பு சம்பவம்
ர. ராஜேஷ்


தமிழுக்கும் அமுதென்று பெயர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்

இது புரட்சிக்கவியின் பொன்னான சொற்கள் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம், இது பாரதியாரின் பெருமித வாக்கு இதனைப் பலரும் சொல்லக் கேட்டுள்ளேன். ஆயினும் இதிலுள்ள உண்மையை எனக்கு உணர்த்திய சம்பவங்கள் பற்பல.

நான் என் பெற்றோருடன் சைதையில் உள்ள காரணீஸ்வரர் ஆலயத்துக்குச் சென்றேன். இறைவனை வழிபட்டோம் திறந்தவெளி அரங்கினுள் இராமாயணச் சொற்பொழிவு நடந்துக் கொண்டிருந்தது. நிகழ்த்தியவர் தமிழ்க்கடல் தாமோதர தீட்சிதர் அவர்கள்.

இராமபிரான் வகிட்ட முனிவரோடு மிதிலா நகருக்குச் சென்ற சம்பவத்தைக் கூறுகின்றார். இராமன், இலக்குவன் இருவரும் மிதிலையினுள் புகுந்தபோது அந்நாட்டுக் கொடிகள் அசைந்தன. அக்கொடிகள் அசைவது அன்றாடம் நிகழும் நிகழ்ச்சிதான். ஆயினும் அதைக் கம்பன் தன் கற்பனை வளத்தைச் சேர்த்துப் பாடுகின்றார். பாற்கடலிலே பள்ளிக்கொண்டிருந்த பரந்தாமன் அல்லவா இராமனாகப் பிறந்து வந்திருக்கின்றான். திருமகளே சீதையாக வந்து தோன்றியிருக்கிறாள். எனவே "செய்யவன் இருந்தானென்று செழுமணிக் கொடிகள் எல்லாம் ஐயனை ஒல்லை வானென்று அழைப்பன போன்றதம்மா என்கிறார் கம்பர்.

சீதையை மணக்கச் சீக்கிரம் வா என்று அழைப்பன போல அக்கொடிகள் அசைந்தனவாம். இயற்கையான ஒரு செயலை தம் கற்பனை வளத்தால் மெருகேற்றி உரைத்த கம்பனின் திறத்தை எடுத்துப் பெரியவர் கூறிய போது அத்தமிழின் இனிமையைக் கண்டு வியந்தேன்.

சொற்பொழிவாளர் கதையினைத் தினமும் கேட்டு மகிழ ஆவல் தூண்டியது. மறுநாளும் கோயிலுக்குச் சென்றேன் கதை தொடர்ந்தது. இராமருக்குப் பட்டாபிஷேகம் செய்ய தசரதன் அறிவித்தான். நகரமே விழாக்கோலம் பூண்டது. மக்கள் அனைவரும் மகிழ்ந்தனர். கைகேயியிடம் இதனைத் தெரிவிக்க தசரதன் சென்றான். ஆனால் கைகேயி, கூனியின் சூழ்ச்சியால் மனம் இருண்டாள் தன் மகன் பரதனுக்கே பட்டாபிஷேகம் செய்ய வேண்டுமென வேண்டினாள் தசரதன் பலவாறு கூறி மன்றாடியும் கேட்ட பாடில்லை. இராமனைப் பதினாறு ஆண்டுகள் காட்டுக்கு அனுப்புமாறு வேண்டினாள் தான் கொடுத்த வரத்தால் கட்டுண்ட மன்னன் வேறு வழியின்றிச் சம்மதம் தெரிவித்தான்.

கைகேயி இராமனை அழைத்தாள். “நீ  ஏயிரண்டாண்டுகள் வனவாசம் செல்; இது மன்னவன் கட்டளை"என்றாள்; பரதன் நாட்டை ஆள்வான் என்றாள். இராமன் இக்கட்டளையை மகிழ்ச்சியோடு ஏற்றான். அப்போது பொழுது விடியும் நேரம் வானத்து மீன்களெல்லாம் மறைந்தன. இதனைக் கம்பன் கூறுவான்: செங்கள் இராமனைக் காட்டுக்கு அனுப்பத் துணிந்ததால் நிகழ்ந்த நிகழ்வாகக் காட்டுகின்றான் இராமனுக்குப் பட்டாபிஷேகத்துக்காக போடப்பட்டிருந்த பந்தல் பிரிந்ததுபோல் நட்சத்திரங்கள் மறைந்தன என்று காட்டுவான், “விரித்த பந்தல் பிரிந்ததாம் என மீனொளித்தது வானமே"என்று புனைவான் கம்பன். இவ்வாறு பல நிகழ்ச்சிகளைச் செந்தமிழில் நாமத்தைப் பேசியதைக் கேட்டேன். இச்செய்திகள் என் மனத்தில் ஒரு பெரும் தாகத்தை ஏற்படுத்தியது.

தமிழை ஆர்வமுடன் கற்கவேண்டும் எனத் தூண்டிய இது போன்ற நிகழ்ச்சிகளுக்குத் தொடர்ந்து சென்று வரத் தொடங்கினேன்.

தமிழ் என் உயிர்மூச்சாக விளங்குகிறது.

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

வெல்க தமிழர்!!ஆக்ஸ்போர்டுதமிழ்2018 சிறுகதைப்போட்டி: மாயசக்திகள்கொண்டபூனை

சிறுகதைப்போட்டி2018, 8-10 வயதுவரை, மூன்றாம்இடம்: ம. பராக்பாபிகிவ்

கீழேஉள்ளஇந்தக்கதை2018 ஆக்ஸ்போர்டுதமிழ்அகராதிசிறுகதைப்போட்டியில் மூன்றாவதுஇடத்தைப்பிடித்துள்ளது. இதில்பங்கேற்றவர்கள், 8 முதல்10 வயதிற்குஉட்பட்டவர்களும்,  'மாயசக்திகள்கொண்டபூனை'என்றதலைப்பைக்குறித்துதங்களதுகதையைசமர்ப்பிக்கவும்அழைக்கப்பட்டனர்.

இந்தக்கதைதேவிஅகாடெமிசீனியர்மேல்நிலைப்பள்ளி வளசரவாக்கம் சென்னையைச்சேர்ந்த9 வயதுடையம. பராக் பாபிகிவ் அவர்களால் எழுதப்பட்டது.

நல்லபண்புருவருணனைகளுடன்இந்தக்கதைநன்றாகஎழுதப்பட்டுள்ளது. இந்தக்கதையில்பூனைதன்னைவளர்த்தவரைக்காப்பாற்றுவதற்காகதன்மாயசக்தியைப் பயன்படுத்தியது. இவ்வாறுசெய்ததினால்அதுதன்உயிரைத்துறந்தது. இக்காரணத்தினால்இக்கதைநிலைநிற்கின்றது.

ஆக்ஸ்போர்டுதமிழ்வாழும்அகராதிக்குழும.பராக்பாபிகிவ்அவர்களை அவரதுசாதனைக்காகப்பாராட்டவிரும்புகிறது.


மாய சக்தி கொண்ட பூனை

ம. பராக்பாபிகிவ்


ஒரு ஊரில் கண்ணன் என்னும் சிறுவன் இருந்தான் அவனுக்கு தாய் இல்லை. தந்தையிடம் மிகுந்த பாசம் கொண்டிருந்தான்.

வறுமையிலும் தன் மகன் நன்றாக படிக்கவேண்டும் என்று பெரிய பள்ளியில் சேர்த்தார். கண்ணனுக்கு பிறந்தநாள் வந்தது. தந்தை மகனுக்கு ஒரு பூனையை பரிசாக கொடுத்தார்.


அந்த அழகு பூனையை பார்த்தவுடன் கண்ணன் மிகவும் ஆனந்தபட்டான். தனிமையிலே இருக்கும் தனக்கு ஒரு உறவு கிடைத்துவிட்டது என்று நினைத்து அப்பூனைக்கு “கண்மணி” என்று பெயரிட்டான்.

கண்மணி கண்ணனுக்கு உயிராக இருந்தது. அப்பூனை மாயசக்தி கொண்டதாக இருந்தது. அப்பூனை கண்ணனுக்கு புத்தாடை அவனுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்தது. கண்மணி கண்ணனை எப்போதும் ஆனந்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தது. கண்ணனும் ஆனந்தமாக இருந்தான்.

அப்போது அவன் ஆனந்தத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல் தன் தந்தைக்கு சாலை விபத்து ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். கண்ணன் மிகவும் வருத்தப்பட்டு அழுதுகொண்டே தன் தந்தையை காண சென்றான். கண்மணியால் அவனுடைய துன்பத்தை, அழுகையை காண முடியவில்லை.

தாயில்லா கண்ணன் தந்தையையும் இழந்துவிடுவானோ என்று நினைத்து தன் சக்தியால் அவருக்கு உயிரை கொடுத்தது. மருத்துவமனையில் தந்தை நலமாக இருந்தார். அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

ஆனந்தத்தை பகிர்ந்து கொள்ள கண்மணியிடம் வந்தான். ஆனால் கண்மணி உயிரோடு இல்லை அப்போதுதான் கண்ணனுக்கு எல்லா உண்மையும் தெரியவந்தது.

கண்ணன் கதறி அழுதான்.