தனியுரிமைக் கொள்கை

இந்தத் தனியுரிமைக் கொள்கையானது oxforddictionaries.com என்பதில் உள்ள இந்த இணையதளம் ("இணையதளம்") மற்றும் அதன் துணைக் களங்களுக்கானதாகும், மேலும் இந்த இணையதளம் மற்றும் அதன் துணைக் களங்களை நீங்கள் பயன்படுத்தும் விதமும் இதன் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

Oxford University Press ("OUP", "நாங்கள்", "எமது" அல்லது "எங்கள்") நிறுவனத்திற்கு ஆன்லைனில் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கும் கடமை உள்ளது. அதை எப்படிச் செய்வோம் என்பதை இந்தத் தனியுரிமைக் கொள்கை விளக்குகிறது. நாங்கள் பெறும் கருத்துகளின் அடிப்படையில் இந்தத் தனியுரிமைக் கொள்கையை மதிப்பாய்வு செய்வோம் என்பதால் எப்போதும் சமீபத்திய பதிப்பையே பார்க்கவும். இந்தத் தனியுரிமைக் கொள்கை தொடர்பாக ஏதாவது கேள்விகள் இருந்தால், எங்களைத் தொடர்புகொள்ளவும்.

இணையதளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்.


எந்த வகையான தகவலைச் சேகரிக்கிறோம் மற்றும் அதனை எப்படிப் பயன்படுத்துகிறோம்?

நீங்கள் இணையதளத்தைப் பார்வையிடும் போது, உங்களை அடையாளம் காணும் தகவலைக் கொண்டிருக்கும் தகவல் மற்றும் புள்ளிவிவரங்களை OUP சேகரிக்கலாம். சேகரிக்கப்பட்ட தகவலில் இணையதளத்தில் நீங்கள் மேற்கொண்ட செயல்பாடு மற்றும் வழிசெலுத்தல் தொடர்பான தகவல் இருக்கலாம். இந்தத் தகவல் எங்களுடைய பயனர்களின் ஆர்வங்கள், அவர்களைப் பற்றிய விவரங்கள் மற்றும் நடத்தை தொடர்பான உள்ளக ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு எங்களுக்கு உதவுகிறது, இதன் மூலம் நாங்கள் பயனர்களை நன்கு புரிந்துகொண்டு, உங்களுக்கும் மற்றும் பிற வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த தகவல், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்க முடியும்.

இணையதளத்தின் பயனராக நீங்கள் பதிவுசெய்தால் அல்லது இணையதளத்தைப் பற்றிய கூடுதல் தகவலைக் கேட்கிறீர்கள் எனில், உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் முகவரி மற்றும் பிற தொடர்புடைய தனிப்பட்ட தகவல்களைக் கேட்போம். இந்த வழியில் சமர்ப்பிக்கப்பட்ட தனிப்பட்ட தகவல், மூன்றாம் தரப்பு ஹோஸ்டிங் நிறுவனத்தால் வழங்கப்படும் எங்கள் அணுகல் கட்டுப்பாட்டுத் தரவுத்தளத்திலும், OUP இல் உள்ள மற்றும்/அல்லது எங்கள் இணைந்த வளாகத்தில் உள்ள எங்கள் வாடிக்கையாளர் தரவுத்தளங்களிலும் சேர்க்கப்படும். நீங்கள் எங்களிடம் தெரிவிக்கும் மாற்றங்களின் அடிப்படையில் இந்தத் தகவல் புதுப்பிக்கப்படும்.

நீங்கள் பதிவுசெய்த பயனராக இருந்தால், நீங்கள் பதிவுசெய்த பயனரா என்பதைச் சரிபார்க்கவும், உங்களுக்கு இணையதளத்தில் கட்டுப்படுத்தப்பட்ட உள்ளடக்கம் மற்றும் செயல்பாட்டின் அணுகலை வழங்கவும் உங்கள் தனிப்பட்ட தகவல் பயன்படுத்தப்படும்.

செய்திமடல்களைப் பெறுவதற்கு நீங்கள் பதிவு செய்தால், உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் பெயரைக் கேட்போம், இந்தத் தகவல் எங்கள் வாடிக்கையாளர் தரவுத்தளங்களில் சேர்க்கப்படும்.

இணையதளத்தில் உள்ளடக்கத்தை நீங்கள் பதிவேற்றினால், நாங்கள் உங்கள் சுயவிவரத்தை (அதாவது, உங்கள் பெயர் மற்றும் நாடு) இணையதளத்தில் காட்சிப்படுத்தக்கூடும்.

எங்களின் வாடிக்கையாளர் தரவுத்தளங்களில் உள்ள தகவலை, நீங்கள் ஆர்வங்காட்டுவதாக நாங்கள் நினைக்கும் எங்களைப் பற்றிய மற்றும் எங்கள் துணை நிறுவனங்கள், எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள், எங்கள் துணை நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றிய தகவல்களை மின்னணு முறையில் அல்லது பிற வழிகளில் உங்களுக்கு அனுப்பப் பயன்படுத்துவோம்.

நிர்வாகக் கேள்விகள், தொழில்நுட்பச் சிக்கல்கள், இணையதளத்தில் கருத்துத் தெரிவிக்க அல்லது இணையதளத்தில் கிடைக்கும் தயாரிப்புகள் மற்றும்/அல்லது சேவைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றிய தகவலை நீங்கள் கேட்க பதிவுசெய்த பயனர் கணக்கின் மூலம் எங்களைத் தொடர்புகொள்ளும் போது தனிப்பட்ட தகவலைக் (உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் பிற தொடர்பு விவரங்கள் போன்றவை) கேட்போம். "எங்களைத் தொடர்புகொள்ளவும்" பக்கத்தின் மூலம் நீங்கள் சமர்ப்பித்த தனிப்பட்ட தகவல், எங்கள் வாடிக்கையாளர் தரவுத்தளங்களில் சேர்க்கப்படாது, உங்கள் கேள்விக்குப் பதிலளிப்பதற்காகவே அந்தத் தகவலைக் கோருகின்றோம். "எங்களைத் தொடர்புகொள்ளவும்" பக்கத்தின் மூலம் எங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட கேள்விகளின் வகைகள் குறித்த புள்ளிவிவரங்கள், ஒட்டுமொத்த படிவத்தில் எங்களால் சேகரிக்கப்படலாம், இதனால் இணையதளத்தைத் திறம்படக் கண்காணிக்க முடிவதுடன், சேவையின் அளவை மேம்படுத்தவும் முடியும்.

கடந்த காலங்களில் நீங்கள் கேள்வி எதுவும் கேட்டிருந்து அல்லது இணையதளத்தில் பதிவு செய்திருந்து (பின்னர் உங்கள் பயனர் கணக்கை மூடியிருக்கும் போது), உங்களைப் பற்றிய தகவலை நாங்கள் சேமித்திருப்பதை விரும்பவில்லை எனில், எங்களைத் தொடர்புகொண்டு தெரிவிக்கவும், எங்கள் வாடிக்கையாளர் தரவுத்தளங்களில் உள்ள விவரங்களை அகற்றுவோம். இணையதளத்தில் கட்டுப்படுத்தப்பட்ட உள்ளடக்கம் மற்றும் செயல்பாட்டிற்கு அணுகலை வழங்குவதற்காக தற்போது பதிவுசெய்துள்ள பயனர்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் சேகரிக்க வேண்டும்.

உங்களைத் தொடர்புகொள்வது அல்லது குறிப்பிட்ட வழியில் உங்களைத் தொடர்புகொள்வது பிடிக்கவில்லை எனில் எங்களைத் தொடர்புகொண்டு அதனைத் தெரிவிக்கலாம். எங்களைத் தொடர்பு கொள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் முகவரியை நீங்கள் பயன்படுத்தினால், நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு மின்னஞ்சல் முகவரியையும் எங்களிடம் தெரிவிக்கவும்.


எப்போது தகவலைப் பகிர்வோம்?

உங்கள் தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் தரப்பினருக்கு விற்க மாட்டோம்.

OUP நிறுவனத்திற்குள்ளாகவே பகிர்ந்துகொள்வோம். இணையதளத்தை உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கு உதவும் வகையில் எங்கள் துணை நிறுவனங்கள், உரிமதாரர்கள் மற்றும் சப்ளையர்களுடன் உங்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்வோம் (எ.கா. எங்கள் ஹோஸ்டிங் சப்ளையர்).

பல மூன்றாம் தரப்பு இணையதளங்களின் இணைப்புகள் எங்கள் இணையதளத்தில் இருக்கும். அந்த இணையதளங்களில் எதையாவது நீங்கள் பார்வையிட்டால், அவர்களும் தகவலைச் சேகரிக்கக்கூடும். இத்தகைய இணையதளங்கள் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லை, மேலும் இந்தத் தனியுரிமைக் கொள்கையாலும் நிர்வகிக்கப்படவில்லை. இந்த இணையதளங்கள் அவற்றின் சொந்தத் தனியுரிமைக் கொள்கைகளைக் கொண்டிருக்கலாம், அந்தக் கொள்கைகளுக்கு எவ்விதமான பொறுப்போ அல்லது கடப்பாடோ எங்களுக்கு இல்லை. அத்தகைய மூன்றாம் தரப்பு இணையதளங்களில் எந்தவொரு தனிப்பட்ட தரவையும் சமர்ப்பிக்கும் முன் அந்தக் கொள்கைகளைச் சரிபார்க்கவும்.

நீங்கள் இணையதளத்தைப் பயன்படுத்தும் விதம் சட்டவிரோதமானது அல்லது மற்றவர்களுக்குச் சேதம் விளைவிப்பதாக நாங்கள் கருதினால், அத்தகைய நடத்தையைத் தடுக்க, சரிசெய்ய அல்லது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யும் எங்கள் கருத்தைச் சரிபார்ப்பதற்காக நியாயமான முறையில் தேவையான அளவிற்கு இணையதளம் மூலம் உங்களைப் பற்றி நாங்கள் பெற்ற தகவல்களை மூன்றாம் தரப்பினரிடம் அளிக்கும் உரிமையைக் கொண்டுள்ளோம்.

எந்தவொரு சட்டப்பூர்வ கடமையையும் கடைப்பிடிப்பதற்காக நாங்கள் உங்கள் தனிப்பட்ட தரவை வெளிப்படுத்தவோ அல்லது பகிரவோ செய்யலாம்; உங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் அல்லது உரிமங்களை நடைமுறைப்படுத்த அல்லது பயன்படுத்துவதற்கு; அல்லது OUP, எங்கள் ஊழியர்கள், துணை நிறுவனங்கள், உரிமதாரர்கள், சப்ளையர்கள் மற்றும்/அல்லது எங்கள் வாடிக்கையாளர்களின் உரிமைகள், சொத்து பாதுகாப்பிற்காக அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக. இதில் மோசடிக்கு எதிரான பாதுகாப்பு மற்றும் கிரெடிட் இடர் குறைப்பு ஆகிய நோக்கங்களுக்காக பிற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் தகவலைப் பரிமாறிக் கொள்வதும் அடங்கும்.

எமது வணிகத்தில் எந்தவொரு பகுதியும் (எங்கள் துணை நிறுவனங்களினதும்) வேறொரு வணிகத்திற்கு விற்பனை செய்யப்பட்டால் அல்லது அதனுடன் ஒருங்கிணைக்கப்பட்டால், உங்கள் விவரங்கள் எங்கள் ஆலோசகர்களுக்கும், எந்தவொரு வருங்கால வாங்குபவர்களுக்கும் அவற்றின் ஆலோசகர்களுக்கும் தெரிவிக்கப்படக்கூடும்.


குக்கீகளைப் பயன்படுத்துதல்

இணையதளத்தில் "குக்கீகள்" மற்றும் பிற தொழில்நுட்பங்களை OUP பயன்படுத்துகிறது. இணையதளத்தில் "குக்கீகள்" மற்றும் பிற ஒத்த தொழில்நுட்பங்களை OUP பயன்படுத்துவதை, OUP இன் குக்கீ கொள்கையில் உள்ள விதிகளும் நிபந்தனைகளும் நிர்வகிக்கின்றன.  குக்கீ கொள்கை ஆங்கிலத்தில் இருக்கும். அதனை வேறொரு மொழியில் பெற விரும்பினால், எங்களைத் தொடர்புகொள்ளவும்.

இணையதளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் குக்கீ கொள்கையின் விதிகளுக்கு இணங்குவதாக ஒப்புக்கொள்கிறீர்கள்.


பாதுகாப்பு

உங்கள் தனிப்பட்ட தகவல்களில் சில மூன்றாம் தரப்பு ஹோஸ்டிங் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் தரவு மையத்தில் சேமிக்கப்படும். எங்கள் மூன்றாம் தரப்பு ஹோஸ்டிங் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் தரவு மையம், மனிதப் பாதுகாப்புடனும், எங்கள் தரவு அனைத்தையும் இரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்திற்கு இணங்கும் அங்கீகரிக்கப்பட்ட நபர்களை மட்டுமே உள்நுழைய அனுமதிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எங்கள் வாடிக்கையாளர் தரவுத்தளங்களுக்கான அணுகல் 'தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில்' மட்டுமே வழங்கப்படுகிறது.

உங்களிடமிருந்து நாங்கள் சேகரிக்கும் தகவல்கள் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதிக்கு வெளியே உள்ள ஓர் இடத்திற்கு மாற்றப்பட்டு, சேமிக்கப்படக்கூடும். இது EEA-க்கு வெளியே எங்களுடன் இணைந்து செயல்படும் அல்லது எங்கள் சப்ளையர்களில் ஒருவரின் பணியாளர்களால் செயலாக்கப்படலாம். இருப்பினும், உங்கள் தகவலின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக மேலே உள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இணையதளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் இந்த இடமாற்றங்களை ஒப்புக்கொள்கிறீர்கள்.


உங்கள் விவரங்களைப் புதுப்பித்தல்

உங்கள் மின்னஞ்சல் முகவரி போன்ற OUP இடம் நீங்கள் அளித்துள்ள தகவல்களில் ஏதாவது மாற்றம் இருந்தால், சரியான விவரங்களை எங்களைத் தொடர்புகொண்டு அளிக்கவும்.


எங்கள் தனியுரிமைக் கொள்கையில் மாற்றங்கள்

இந்தத் தனியுரிமைக் கொள்கையில் மாற்றங்களைச் செய்வதற்கான உரிமையை நாங்கள் கொண்டுள்ளோம். இந்தத் தனியுரிமைக் கொள்கையில் நாங்கள் மேற்கொள்ளும் மாற்றங்கள் இந்தப் பக்கத்தில் இடுகையிடப்படும், அத்துடன் தேவைப்பட்டால், மின்னஞ்சலில் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.


மொழி

இந்தத் தனியுரிமைக் கொள்கை ஆங்கில மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தனியுரிமைக் கொள்கை வேறொரு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டாலும், ஆங்கில மொழி பதிப்பே இறுதியானதாகும்.


நிர்வகிக்கும் சட்டம்

இந்தத் தனியுரிமைக் கொள்கையானது பிரத்யேகமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு ஏற்ப நிர்வகிக்கப்படும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.