தனியுரிமைக் கொள்கை மற்றும் சட்ட அறிவிப்பு

தனியுரிமைக் கொள்கை

இந்தத் தனியுரிமைக் கொள்கையானது oxforddictionaries.com என்பதில் உள்ள இந்த இணையதளம் ("இணையதளம்") மற்றும் அதன் துணைக் களங்களுக்கானதாகும், மேலும் இந்த இணையதளம் மற்றும் அதன் துணைக் களங்களை நீங்கள் பயன்படுத்தும் விதமும் இதன் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.


Oxford University Press ("OUP", "நாங்கள்", "எமது" அல்லது "எங்கள்") நிறுவனத்திற்கு ஆன்லைனில் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கும் கடமை உள்ளது. அதை எப்படிச் செய்வோம் என்பதை இந்தத் தனியுரிமைக் கொள்கை விளக்குகிறது. நாங்கள் பெறும் கருத்துகளின் அடிப்படையில் இந்தத் தனியுரிமைக் கொள்கையை மதிப்பாய்வு செய்வோம் என்பதால் எப்போதும் சமீபத்திய பதிப்பையே பார்க்கவும். இந்தத் தனியுரிமைக் கொள்கை தொடர்பாக ஏதாவது கேள்விகள் இருந்தால், எங்களைத் தொடர்புகொள்ளவும்.


இணையதளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்.எந்த வகையான தகவலைச் சேகரிக்கிறோம் மற்றும் அதனை எப்படிப் பயன்படுத்துகிறோம்?

நீங்கள் இணையதளத்தைப் பார்வையிடும் போது, உங்களை அடையாளம் காணும் தகவலைக் கொண்டிருக்கும் தகவல் மற்றும் புள்ளிவிவரங்களை OUP சேகரிக்கலாம். சேகரிக்கப்பட்ட தகவலில் இணையதளத்தில் நீங்கள் மேற்கொண்ட செயல்பாடு மற்றும் வழிசெலுத்தல் தொடர்பான தகவல் இருக்கலாம். இந்தத் தகவல் எங்களுடைய பயனர்களின் ஆர்வங்கள், அவர்களைப் பற்றிய விவரங்கள் மற்றும் நடத்தை தொடர்பான உள்ளக ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு எங்களுக்கு உதவுகிறது, இதன் மூலம் நாங்கள் பயனர்களை நன்கு புரிந்துகொண்டு, உங்களுக்கும் மற்றும் பிற வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த தகவல், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்க முடியும்.


இணையதளத்தின் பயனராக நீங்கள் பதிவுசெய்தால் அல்லது இணையதளத்தைப் பற்றிய கூடுதல் தகவலைக் கேட்கிறீர்கள் எனில், உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் முகவரி மற்றும் பிற தொடர்புடைய தனிப்பட்ட தகவல்களைக் கேட்போம். இந்த வழியில் சமர்ப்பிக்கப்பட்ட தனிப்பட்ட தகவல், மூன்றாம் தரப்பு ஹோஸ்டிங் நிறுவனத்தால் வழங்கப்படும் எங்கள் அணுகல் கட்டுப்பாட்டுத் தரவுத்தளத்திலும், OUP இல் உள்ள மற்றும்/அல்லது எங்கள் இணைந்த வளாகத்தில் உள்ள எங்கள் வாடிக்கையாளர் தரவுத்தளங்களிலும் சேர்க்கப்படும். நீங்கள் எங்களிடம் தெரிவிக்கும் மாற்றங்களின் அடிப்படையில் இந்தத் தகவல் புதுப்பிக்கப்படும்.


நீங்கள் பதிவுசெய்த பயனராக இருந்தால், நீங்கள் பதிவுசெய்த பயனரா என்பதைச் சரிபார்க்கவும், உங்களுக்கு இணையதளத்தில் கட்டுப்படுத்தப்பட்ட உள்ளடக்கம் மற்றும் செயல்பாட்டின் அணுகலை வழங்கவும் உங்கள் தனிப்பட்ட தகவல் பயன்படுத்தப்படும்.


செய்திமடல்களைப் பெறுவதற்கு நீங்கள் பதிவு செய்தால், உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் பெயரைக் கேட்போம், இந்தத் தகவல் எங்கள் வாடிக்கையாளர் தரவுத்தளங்களில் சேர்க்கப்படும்.

இணையதளத்தில் உள்ளடக்கத்தை நீங்கள் பதிவேற்றினால், நாங்கள் உங்கள் சுயவிவரத்தை (அதாவது, உங்கள் பெயர் மற்றும் நாடு) இணையதளத்தில் காட்சிப்படுத்தக்கூடும்.


எங்களின் வாடிக்கையாளர் தரவுத்தளங்களில் உள்ள தகவலை, நீங்கள் ஆர்வங்காட்டுவதாக நாங்கள் நினைக்கும் எங்களைப் பற்றிய மற்றும் எங்கள் துணை நிறுவனங்கள், எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள், எங்கள் துணை நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றிய தகவல்களை மின்னணு முறையில் அல்லது பிற வழிகளில் உங்களுக்கு அனுப்பப் பயன்படுத்துவோம்.


நிர்வாகக் கேள்விகள், தொழில்நுட்பச் சிக்கல்கள், இணையதளத்தில் கருத்துத் தெரிவிக்க அல்லது இணையதளத்தில் கிடைக்கும் தயாரிப்புகள் மற்றும்/அல்லது சேவைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றிய தகவலை நீங்கள் கேட்க பதிவுசெய்த பயனர் கணக்கின் மூலம் எங்களைத் தொடர்புகொள்ளும் போது தனிப்பட்ட தகவலைக் (உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் பிற தொடர்பு விவரங்கள் போன்றவை) கேட்போம். "எங்களைத் தொடர்புகொள்ளவும்" பக்கத்தின் மூலம் நீங்கள் சமர்ப்பித்த தனிப்பட்ட தகவல், எங்கள் வாடிக்கையாளர் தரவுத்தளங்களில் சேர்க்கப்படாது, உங்கள் கேள்விக்குப் பதிலளிப்பதற்காகவே அந்தத் தகவலைக் கோருகின்றோம். "எங்களைத் தொடர்புகொள்ளவும்" பக்கத்தின் மூலம் எங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட கேள்விகளின் வகைகள் குறித்த புள்ளிவிவரங்கள், ஒட்டுமொத்த படிவத்தில் எங்களால் சேகரிக்கப்படலாம், இதனால் இணையதளத்தைத் திறம்படக் கண்காணிக்க முடிவதுடன், சேவையின் அளவை மேம்படுத்தவும் முடியும்.


கடந்த காலங்களில் நீங்கள் கேள்வி எதுவும் கேட்டிருந்து அல்லது இணையதளத்தில் பதிவு செய்திருந்து (பின்னர் உங்கள் பயனர் கணக்கை மூடியிருக்கும் போது), உங்களைப் பற்றிய தகவலை நாங்கள் சேமித்திருப்பதை விரும்பவில்லை எனில், எங்களைத் தொடர்புகொண்டு தெரிவிக்கவும், எங்கள் வாடிக்கையாளர் தரவுத்தளங்களில் உள்ள விவரங்களை அகற்றுவோம். இணையதளத்தில் கட்டுப்படுத்தப்பட்ட உள்ளடக்கம் மற்றும் செயல்பாட்டிற்கு அணுகலை வழங்குவதற்காக தற்போது பதிவுசெய்துள்ள பயனர்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் சேகரிக்க வேண்டும்.


உங்களைத் தொடர்புகொள்வது அல்லது குறிப்பிட்ட வழியில் உங்களைத் தொடர்புகொள்வது பிடிக்கவில்லை எனில் எங்களைத் தொடர்புகொண்டு அதனைத் தெரிவிக்கலாம். எங்களைத் தொடர்பு கொள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் முகவரியை நீங்கள் பயன்படுத்தினால், நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு மின்னஞ்சல் முகவரியையும் எங்களிடம் தெரிவிக்கவும் .எப்போது தகவலைப் பகிர்வோம்?

உங்கள் தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் தரப்பினருக்கு விற்க மாட்டோம்.


OUP நிறுவனத்திற்குள்ளாகவே பகிர்ந்துகொள்வோம். இணையதளத்தை உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கு உதவும் வகையில் எங்கள் துணை நிறுவனங்கள், உரிமதாரர்கள் மற்றும் சப்ளையர்களுடன் உங்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்வோம் (எ.கா. எங்கள் ஹோஸ்டிங் சப்ளையர்).


பல மூன்றாம் தரப்பு இணையதளங்களின் இணைப்புகள் எங்கள் இணையதளத்தில் இருக்கும். அந்த இணையதளங்களில் எதையாவது நீங்கள் பார்வையிட்டால், அவர்களும் தகவலைச் சேகரிக்கக்கூடும். இத்தகைய இணையதளங்கள் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லை, மேலும் இந்தத் தனியுரிமைக் கொள்கையாலும் நிர்வகிக்கப்படவில்லை. இந்த இணையதளங்கள் அவற்றின் சொந்தத் தனியுரிமைக் கொள்கைகளைக் கொண்டிருக்கலாம், அந்தக் கொள்கைகளுக்கு எவ்விதமான பொறுப்போ அல்லது கடப்பாடோ எங்களுக்கு இல்லை. அத்தகைய மூன்றாம் தரப்பு இணையதளங்களில் எந்தவொரு தனிப்பட்ட தரவையும் சமர்ப்பிக்கும் முன் அந்தக் கொள்கைகளைச் சரிபார்க்கவும்.


நீங்கள் இணையதளத்தைப் பயன்படுத்தும் விதம் சட்டவிரோதமானது அல்லது மற்றவர்களுக்குச் சேதம் விளைவிப்பதாக நாங்கள் கருதினால், அத்தகைய நடத்தையைத் தடுக்க, சரிசெய்ய அல்லது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யும் எங்கள் கருத்தைச் சரிபார்ப்பதற்காக நியாயமான முறையில் தேவையான அளவிற்கு இணையதளம் மூலம் உங்களைப் பற்றி நாங்கள் பெற்ற தகவல்களை மூன்றாம் தரப்பினரிடம் அளிக்கும் உரிமையைக் கொண்டுள்ளோம்.


எந்தவொரு சட்டப்பூர்வ கடமையையும் கடைப்பிடிப்பதற்காக நாங்கள் உங்கள் தனிப்பட்ட தரவை வெளிப்படுத்தவோ அல்லது பகிரவோ செய்யலாம்; உங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் அல்லது உரிமங்களை நடைமுறைப்படுத்த அல்லது பயன்படுத்துவதற்கு; அல்லது OUP, எங்கள் ஊழியர்கள், துணை நிறுவனங்கள், உரிமதாரர்கள், சப்ளையர்கள் மற்றும்/அல்லது எங்கள் வாடிக்கையாளர்களின் உரிமைகள், சொத்து பாதுகாப்பிற்காக அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக. இதில் மோசடிக்கு எதிரான பாதுகாப்பு மற்றும் கிரெடிட் இடர் குறைப்பு ஆகிய நோக்கங்களுக்காக பிற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் தகவலைப் பரிமாறிக் கொள்வதும் அடங்கும்.


எமது வணிகத்தில் எந்தவொரு பகுதியும் (எங்கள் துணை நிறுவனங்களினதும்) வேறொரு வணிகத்திற்கு விற்பனை செய்யப்பட்டால் அல்லது அதனுடன் ஒருங்கிணைக்கப்பட்டால், உங்கள் விவரங்கள் எங்கள் ஆலோசகர்களுக்கும், எந்தவொரு வருங்கால வாங்குபவர்களுக்கும் அவற்றின் ஆலோசகர்களுக்கும் தெரிவிக்கப்படக்கூடும்.குக்கீகளைப் பயன்படுத்துதல்

இணையதளத்தில் "குக்கீகள்" மற்றும் பிற தொழில்நுட்பங்களை OUP பயன்படுத்துகிறது. இணையதளத்தில் "குக்கீகள்" மற்றும் பிற ஒத்த தொழில்நுட்பங்களை OUP பயன்படுத்துவதை, OUP இன் குக்கீ கொள்கையில் உள்ள விதிகளும் நிபந்தனைகளும் நிர்வகிக்கின்றன.  குக்கீ கொள்கை ஆங்கிலத்தில் இருக்கும். அதனை வேறொரு மொழியில் பெற விரும்பினால், எங்களைத் தொடர்புகொள்ளவும்.

இணையதளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் குக்கீ கொள்கையின் விதிகளுக்கு இணங்குவதாக ஒப்புக்கொள்கிறீர்கள்.பாதுகாப்பு

உங்கள் தனிப்பட்ட தகவல்களில் சில மூன்றாம் தரப்பு ஹோஸ்டிங் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் தரவு மையத்தில் சேமிக்கப்படும். எங்கள் மூன்றாம் தரப்பு ஹோஸ்டிங் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் தரவு மையம், மனிதப் பாதுகாப்புடனும், எங்கள் தரவு அனைத்தையும் இரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்திற்கு இணங்கும் அங்கீகரிக்கப்பட்ட நபர்களை மட்டுமே உள்நுழைய அனுமதிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வாடிக்கையாளர் தரவுத்தளங்களுக்கான அணுகல் 'தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில்' மட்டுமே வழங்கப்படுகிறது.


உங்களிடமிருந்து நாங்கள் சேகரிக்கும் தகவல்கள் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதிக்கு வெளியே உள்ள ஓர் இடத்திற்கு மாற்றப்பட்டு, சேமிக்கப்படக்கூடும். இது EEA-க்கு வெளியே எங்களுடன் இணைந்து செயல்படும் அல்லது எங்கள் சப்ளையர்களில் ஒருவரின் பணியாளர்களால் செயலாக்கப்படலாம். இருப்பினும், உங்கள் தகவலின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக மேலே உள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இணையதளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் இந்த இடமாற்றங்களை ஒப்புக்கொள்கிறீர்கள்.உங்கள் விவரங்களைப் புதுப்பித்தல்

உங்கள் மின்னஞ்சல் முகவரி போன்ற OUP இடம் நீங்கள் அளித்துள்ள தகவல்களில் ஏதாவது மாற்றம் இருந்தால், சரியான விவரங்களை எங்களைத் தொடர்புகொண்டு அளிக்கவும்.எங்கள் தனியுரிமைக் கொள்கையில் மாற்றங்கள்

இந்தத் தனியுரிமைக் கொள்கையில் மாற்றங்களைச் செய்வதற்கான உரிமையை நாங்கள் கொண்டுள்ளோம். இந்தத் தனியுரிமைக் கொள்கையில் நாங்கள் மேற்கொள்ளும் மாற்றங்கள் இந்தப் பக்கத்தில் இடுகையிடப்படும், அத்துடன் தேவைப்பட்டால், மின்னஞ்சலில் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.மொழி

இந்தத் தனியுரிமைக் கொள்கை ஆங்கில மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தனியுரிமைக் கொள்கை வேறொரு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டாலும், ஆங்கில மொழி பதிப்பே இறுதியானதாகும்.நிர்வகிக்கும் சட்டம்

இந்தத் தனியுரிமைக் கொள்கையானது பிரத்யேகமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு ஏற்ப நிர்வகிக்கப்படும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.

சட்ட அறிவிப்பு

இந்தச் சட்ட அறிவிப்பானது oxforddictionaries.com என்பதில் உள்ள இந்த இணையதளம் ("இணையதளம்") மற்றும் அதன் துணைக் களங்களுக்கானதாகும், மேலும் இந்த இணையதளம் மற்றும் அதன் துணைக் களங்களை நீங்கள் பயன்படுத்தும் விதமும் இதன் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த அறிக்கையில் அமைக்கப்பட்டுள்ள நடைமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்.


உங்கள் விவரங்களை Oxford University Press ("OUP", "நாங்கள்", "எமது" அல்லது "எங்கள்") இல் பதிவுசெய்யாமல் அல்லது வழங்காமல் இணையதளத்தின் சில பகுதிகளை நீங்கள் அணுகலாம்.


இணையதளத்தில் உள்ள தகவல்கள் முழுமையடையற்றதாக, காலாவதியானதாக அல்லது துல்லியமற்றதாக இருக்கலாம் மற்றும் தொழில்நுட்பத் தவறுகள் அல்லது அச்சுக்கலை பிழைகளைக் கொண்டிருக்கலாம், OUP தனது சொந்த விருப்பப்படி இணையதளத்தைப் புதுப்பிக்கும் உரிமையைக் கொண்டுள்ளது. அதன்படி, இத்தகைய தகவல்கள் அறிவிப்பு இல்லாமல் மாற்றப்படலாம் அல்லது மேம்படுத்தப்படலாம்.


இந்தச் சட்ட அறிவிப்பில் மாற்றங்களைச் செய்வதற்கான உரிமையை நாங்கள் கொண்டுள்ளோம். இந்தச் சட்ட அறிவிப்பில் நாங்கள் மேற்கொள்ளும் மாற்றங்கள் இந்தப் பக்கத்தில் இடுகையிடப்படும், அத்துடன் தேவைப்பட்டால், மின்னஞ்சல் மூலமும் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். இணையதளத்தின் குறிப்பிட்ட பக்கங்களில் அமைக்கப்பட்டுள்ள சட்ட அறிவிப்புகள் அல்லது விதிமுறைகள் இந்தச் சட்ட அறிவிப்பின் சில விதிமுறைகளை மீறலாம்.பயனர்பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள்

நீங்கள் இணையதளத்தில் பதிவு செய்து, பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பெற்றிருக்கிறீர்கள் என்றால், எவருக்கும் உங்கள் பயனர்பெயர் மற்றும்/அல்லது கடவுச்சொல்லை அளிக்கமாட்டீர்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்கள். உங்கள் பயனர் பெயர் மற்றும்/அல்லது கடவுச்சொல் வெளிப்பட்டிருந்தால், உடனடியாக எங்களுக்குத் தெரிவிக்க ஒப்புக்கொள்கிறீர்கள், இதனால் OUP உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், புதிய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உங்களுக்கு வழங்கவும் முடியும்.இணையதள உள்ளடக்கத்தைப் பயன்படுத்துதல்

இவற்றுக்கான அனுமதி உங்களுக்குக் கிடைக்கும்:

1.    இணையதள உள்ளடக்கத்தின் பகுதிகளைத் தேடுதல், பார்த்தல், மீட்டெடுத்தல் மற்றும் காட்சிப்படுத்துதல்;

2.    இணையதள உள்ளடக்கத்தின் பகுதிகளை மின்னணு முறையில் சேமித்தல்;

3.    மற்றும்/அல்லது இணையதள உள்ளடக்கப் பகுதிகளை ஒற்றை நகல்களாக அச்சிடுதல்


இணையதளத்தின் குறிப்பிட்ட பக்கங்களில் தோன்றும் பிரத்யேகக் கட்டுப்பாடுகளும் ஒவ்வொரு வழக்கிற்கும் பொருந்தும். பதிப்புரிமை அறிவிப்புகள் அல்லது பிற வழிகளில் உள்ள அடையாளங்காட்டிகள் அல்லது பொறுப்புத்துறப்புகளை இணையதளத்தில் அவை காட்சிப்படுத்தப்பட்டுள்ள முறைகளில் இருந்து அகற்றவோ அல்லது திருத்தவோ கூடாது; சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அல்லது OUP ஆல் அனுமதிக்கப்பட்ட எந்தவொரு நோக்கத்திற்காகவும் தவிர்த்து பிற வழிகளில் கட்டுப்படுத்தப்பட்ட உள்ளடக்கத்தை அச்சிடவோ அல்லது மின்னணுப் பிரதிகளை உருவாக்கவோ கூடாது; இணையம் மற்றும் உலகளாவிய இணைய வலைப்பின்னல் உட்பட ஆனால் வரம்பில்லாமல் எந்தவொரு மின்னணு நெட்வொர்க்கிலும் ஆவணத்தின் எந்தப் பகுதியையும் காட்சிப்படுத்தவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது; ஆவணத்தை அணுக அல்லது பயன்படுத்த யாரையும் அனுமதிக்கக்கூடாது; மற்றும்/அல்லது எந்தவொரு வணிகப் பயன்பாட்டிலும் ஆவணத்தை முழுமையாகவோ அல்லது அதன் பகுதிகளையோ பயன்படுத்தக்கூடாது.


செய்திமடல்களைப் பெறுவதற்கு நீங்கள் பதிவுசெய்திருந்தாலோ அல்லது எங்கள் இணைய ஊட்டத்தைப் பெற சந்தா சேர்ந்திருந்தாலோ, வணிகமற்ற பயன்பாட்டிற்கு மட்டுமே நாங்கள் அனுப்பும் ஆவணங்களைப் பயன்படுத்த வேண்டும். இவற்றைச் செய்யக்கூடாது:

1.    உங்களுக்கு அனுப்பிய ஆவணங்களில் உள்ள பதிப்புரிமை அறிவிப்புகள் அல்லது பிற வழிகளில் உள்ள அடையாளங்காட்டிகள் அல்லது பொறுப்புத்துறப்புகளை அகற்றவோ அல்லது திருத்தவோ கூடாது;

2.    சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அல்லது OUP ஆல் அனுமதிக்கப்பட்ட எந்தவொரு நோக்கத்திற்காகவும் தவிர்த்து பிற வழிகளில் கட்டுப்படுத்தப்பட்ட உள்ளடக்கத்தை அச்சிடவோ அல்லது மின்னணுப் பிரதிகளை உருவாக்கவோ கூடாது;

3.    இணையம் மற்றும் உலகளாவிய இணைய வலைப்பின்னல் உட்பட ஆனால் வரம்பில்லாமல் எந்தவொரு மின்னணு நெட்வொர்க்கிலும் ஆவணத்தின் எந்தப் பகுதியையும் காட்சிப்படுத்தவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது;

4.    ஆவணத்தை அணுக அல்லது பயன்படுத்த யாரையும் அனுமதிக்கக்கூடாது; மற்றும்/அல்லது

5.    எந்தவொரு வணிகப் பயன்பாட்டிலும் ஆவணத்தை முழுமையாகவோ அல்லது அதன் பகுதிகளையோ பயன்படுத்தக்கூடாது.அறிவுசார் சொத்துரிமைகள்

நாங்கள் மற்றும்/அல்லது எங்கள் உரிமதாரர்கள், இணையதளத்தில் உள்ள அனைத்து அறிவுசார் சொத்துரிமைகளின் உரிமையாளர்கள் ஆவர், இணையதளம் மற்றும் இணையதளத்தில் உள்ள ஆவணங்கள், உலக முழுவதும் உள்ள பதிப்புரிமை மற்றும் வர்த்தகச் சின்னங்களுக்கான சட்டங்கள் உட்பட அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன. இந்தச் சட்ட அறிவிப்பு மற்றும் உங்களுக்கும் OUP நிறுவனத்திற்கும் இடையில் உள்ள எந்தவொரு உரிம ஒப்பந்தத்திற்கும் உட்பட்டு, அவற்றிற்கான உரிமைகள் அனைத்தும் வழங்கப்படுவதுடன், எங்களது எழுத்துப்பூர்வ முன் அனுமதியின்றி அவற்றை நகலெடுக்கவோ, மாற்றவோ, வெளியிடவோ, ஒளிபரப்பவோ அல்லது பிற வழிகளில் விநியோகிக்கவோ கூடாது. Oxford University Press, OUP, Oxford மற்றும்/அல்லது Oxford University Press வழங்கும் பிற தயாரிப்புகள் அல்லது சேவைகளின் பெயர்கள் மற்றும் இணையதளத்தின் குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் Oxford University Press இன் வர்த்தகச் சின்னங்கள் அல்லது பதிவுசெய்த வர்த்தகச் சின்னங்கள் ஆகும்.


இதற்கு முன் சொல்லப்பட்டது மட்டுமல்லாது மற்றும் பொருந்தும் இடங்களில், இணையதளத்தில் தோன்றும் ஒவ்வொரு படக் காட்சிகளின் பதிப்புரிமையானது 'பட விவரங்கள்' என்ற சாளரத்தில் உள்ள உரிமையாளருக்குச்(களுக்குச்) சொந்தமானதாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு படக் காட்சியையும் நகலெடுக்கவோ, மாற்றவோ, வெளியிடவோ, ஒளிபரப்பவோ அல்லது பிற வழிகளில் விநியோகிக்கவோ கூடாது.


இணைப்புகள்

மற்ற இணையதளங்களுக்கான இணைப்புகள் OUP ஆல் நல்ல நம்பிக்கை அடிப்படையில், தகவல் வழங்குதல் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இணையதளத்தில் இணைக்கப்பட்ட எந்தவொரு இணையதளத்திலும் இருக்கும் ஆவணங்களுக்கான எந்தவொரு பொறுப்பையும் OUP துறக்கிறது.


கூடுதலாக, OUP வழங்காத இணையதளத்திற்கான இணைப்பு இருப்பது என்பது OUP அதனை ஆதரிப்பதாகவோ அல்லது அத்தகைய இணையதளத்தின் உள்ளடக்கம் அல்லது பயன்பாட்டிற்கான பொறுப்பு அல்லது அத்தகைய இணையதளத்தில் வழங்கப்படும் தயாரிப்புகள் மற்றும்/அல்லது சேவைகளுக்கான பொறுப்பை ஏற்பதாகவோ அர்த்தம் கொள்ளக்கூடாது. நீங்கள் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதில் வைரஸ்கள், வார்ம்கள், ட்ரோஜன்கள் மற்றும் அழிக்கும் தன்மை கொண்ட பிற பொருட்கள் போன்றவை இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது உங்களைச் சார்ந்ததாகும்.


சேவை அணுகல்

இணையதளம் பொதுவாக 24 மணிநேரமும் எப்போதும் கிடைக்கும் என்று உறுதிகூறும் அதே வேளையில், எந்த நேரத்திலும் அல்லது எந்தக் கால அளவிலும் எந்தவொரு காரணத்திற்காகவும் இணையதளம் கிடைக்காமல் போனால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.

கணினி செயலிழப்பு, பராமரிப்பு அல்லது பழுது அல்லது எங்கள் கட்டுப்பாட்டை மீறிய காரணங்கள் போன்றவற்றினால் அறிவிப்பு இல்லாமல் இணையதளத்திற்கான அணுகல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படலாம்.பயனர் உருவாக்கிய உள்ளடக்கம்

எங்கள் இணையதளத்தின் பகுதிகள் பயனர்கள் தங்கள் சொந்த உள்ளடக்கத்தைப் பதிவேற்ற அனுமதிக்கலாம். பயனர்களால் பதிவேற்றப்பட்ட உள்ளடக்கம் கண்டிப்பாக OUP இன் பார்வைகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எங்கள் இணையதளத்தில் உள்ளடக்கத்தைப் பதிவேற்றுவதன் மூலம், எங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதாக ஒப்புக்கொள்கிறீர்கள். இத்தகைய உள்ளடக்கம் இந்த வழிகாட்டுதல்களுடன் இணங்குகிறது என்றும், அத்தகைய ஆவணங்களின் மற்றும் அவற்றிற்குத் தேவையான அனைத்து உரிமைகளையும் நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்றும் அத்தகைய ஆவணங்கள் எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் தனிப்பட்ட அல்லது தனியுரிமை உரிமைகளை மீறவில்லை என்றும், மேலும் அத்தகைய ஆவணம் தொழில்நுட்ப ரீதியாகத் தீங்கு விளைக்காது என்றும் (கணினி வைரஸ்கள், லாஜிக் பாம்கள், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம்கள், தீங்கு விளைவிக்கும் கூறுகள், சிதைந்த தரவு அல்லது பிற தீங்கிழைக்கும் மென்பொருள் அல்லது தீங்கிழைக்கும் தரவு உட்பட ஆனால் வரம்பில்லாமல்) உத்தரவாதம் அளிக்கிறீர்கள்.

வழிகாட்டுதல்களுக்கு (இணைப்பு) இணங்காத மற்றும்/அல்லது தீங்குவிளைவிக்கும், சட்டவிரோதமான, அச்சுறுத்தும், ஆபாசமான அல்லது வேறுவிதமாக ஆட்சேபிக்கக்கூடியது, பயனர்கள் இடுகையிடும் எந்த உள்ளடக்கத்தையும் தனது சொந்த விருப்பத்தின் பேரில் மதிப்பாய்வு செய்யும், திருத்தும் அல்லது நீக்கும் உரிமையை OUP கொண்டுள்ளது. இதற்கு முன் சொல்லப்பட்டது மட்டுமல்லாது, நீங்கள் அல்லது இணையதளத்தின் பிற பயனரால் பதிவேற்றப்படும் எந்தவொரு உள்ளடக்கத்திற்கான பொறுப்பு அல்லது கடப்பாடு அனைத்தையும் OUP வெளிப்படையாகப் பொறுப்புத் துறக்கிறது. இணையதளத்தில் நீங்கள் பதிவிட்ட அல்லது பதிவேற்றிய எந்தவொரு உள்ளடக்கமும் மூன்றாம் தரப்பினரின் அறிவுசார் சொத்துரிமைகள் அல்லது அவர்களின் தனியுரிமையை மீறுவதாக அவர்களால் உரிமை கோரப்படும் போது அவர்களிடமோ அல்லது சட்ட அமலாக்கத் துறையிடமோ உங்கள் அடையாளத்தை அளிக்கும் உரிமையையும் கொண்டுள்ளோம்.


பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதில் OUP-க்கு உள்ள உரிமை

எங்கள் இணையதளத்திற்குப் பதிவேற்றப்படும் எந்தவொரு உள்ளடக்கமும் இரகசியமானதாகக் கருதப்படாது. இந்தச் சட்ட அறிவிப்புக்கு இணங்க இந்த இணையதளத்தைப் பயன்படுத்த (மேலே உள்ள இணையதள உள்ளடக்கத்தைப் பயன்படுத்துதல் பிரிவைப் பார்க்கவும்) உங்களை OUP அனுமதிப்பதுடன் இணைந்து, நிரந்தர, உலகளாவிய, திரும்பப்பெற முடியாத, ராயல்டி இல்லாத, பரிமாற்றக்கூடிய, பிரத்யேகமற்ற உரிமத்தை, பதிவேற்றும் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தவும், திருத்தவும், பகுப்பாய்வு செய்யவும், வெளியிடவும், காட்சிப்படுத்தவும், பொதுவில் காட்டவும் அளிப்பதுடன், எல்லா மொழிகளிலும், எந்தவொரு வடிவத்திலும் அல்லது எந்தவொரு மீடியம் வழியாகவும் அது இப்போது இருந்தாலும் அல்லது இல்லையென்றாலும் கூட அத்தகைய உள்ளடக்கத்தைப் (அல்லது அதன் பாகத்தை) பயன்படுத்தும் உரிமையை அளிக்கிறீர்கள் (மற்றும் இத்தகைய உரிமைகளைத் துணை உரிமமாக அளிக்கும் உரிமை). எங்கள் இணையதளத்தில் பதிவேற்றும் உள்ளடக்கத்திற்கான தார்மீக உரிமைகளையும் விட்டுக்கொடுக்கிறீர்கள் (ஆசிரியராக அடையாளப்படுத்தும் உரிமை உள்ளிட்ட ஆனால் வரம்பில்லாமல் அனைத்தும்). நாங்கள் உங்களுக்கு கிரெடிட் வழங்கலாம், ஆனால் அவ்வாறு செய்ய வேண்டும் என்ற எந்தக் கடமையும் எங்களுக்கு இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.


மதிப்பீடு

இந்தச் சட்ட அறிவிப்பு மற்றும்/அல்லது வழிகாட்டுதல்களை ஏதாவது மீறுகிறதா என்று இணையதளத்தில் உள்ள அனைத்துத் தகவல்களையும் கண்காணிக்கும் உரிமையைக் கொண்டுள்ளோம்; இதன் விளைவாக, சில இடுகைகள் வெளியிடப்படுவதற்கு முன் மதிப்பீடு செய்யப்படுவதற்கு அனுப்பி வைக்கப்படலாம், அதனால் அந்த இடுகை இணையதளத்தில் தோன்றுவதில் தாமதம் ஏற்படலாம்.


இடைநிறுத்தம் மற்றும் சேவை அணுகல் நிறுத்தம்

இணையதளத்தை நீங்கள் பயன்படுத்துவதில் இந்தச் சட்ட அறிவிப்பு அல்லது வழிகாட்டுதல்களில் [இணைப்பு] ஏதாவது மீறல் உள்ளதா என்று எங்கள் சுய முடிவின்படி தீர்மானிப்போம். இந்தச் சட்ட அறிவிப்பு அல்லது வழிகாட்டுதல்களில் மீறல் நிகழ்ந்தால், இந்தச் சட்ட அறிவிப்பு அல்லது வழிகாட்டுதல்களுக்கு இணங்காத எந்தவொரு பயனரையும் எச்சரிக்கையோ அல்லது விவாதமோ இல்லாமல் தடுக்கும், முந்தைய இடுகைகள் மற்றும் பங்களிப்புகள் அனைத்தையும் அகற்றுதல் உட்பட ஆனால் வரம்பில்லாமல் எங்களுக்குப் பொருத்தமானதாகத் தோன்றும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

இந்தச் சட்ட அறிவிப்பு மற்றும்/அல்லது வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கத் தவறுவதன் விளைவாக, இணையதளத்தை அணுகும் மற்றும்/அல்லது பயன்படுத்துவதற்கான உங்கள் உரிமை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ உடனடியாகத் திரும்பப் பெறப்படலாம்.


இணையதளங்களின் உலகளாவிய இயல்பு

இணையதளத்தின் உலகளாவிய இயல்பை நீங்கள் புரிந்துகொண்டு, இணையதளத்தைப் பயன்படுத்தும் போது பொருந்தக்கூடிய எல்லா உள்ளூர் சட்டங்களுடனும் இணங்குவதற்கு ஒப்புக்கொள்கிறீர்கள்.

இணையதளத்தில் நாங்கள் வெளியிடுகின்ற தகவல்களில், உங்கள் நாட்டிலும் அறிவிக்கப்படாத அல்லது கிடைக்காத எங்கள் சேவைகள் மற்றும்/அல்லது தயாரிப்புகளுக்கான குறிப்புகள் அல்லது பலதளக் குறிப்புகள் இருக்கலாம். இத்தகைய குறிப்புகளின் காரணமாக உங்களுடைய நாட்டில் அத்தகைய சேவைகள் மற்றும்/அல்லது தயாரிப்புகளை அறிவிக்கவிருக்கிறோம் என்பதாகக் கவனத்தில் கொள்ளக்கூடாது.


மொழி

இந்தச் சட்ட அறிவிப்பு ஆங்கில மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்ட அறிவிப்பு வேறொரு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டாலும், ஆங்கில மொழி பதிப்பே இறுதியானதாகும்.


நிர்வகிக்கும் சட்டம்

இந்தச் சட்ட அறிவிப்பானது பிரத்யேகமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு ஏற்ப நிர்வகிக்கப்படும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். இதற்கு முன் சொல்லப்பட்டது மட்டுமல்லாது, இந்தச் சட்ட அறிவிப்பில் உள்ள எந்தவொரு தடையும் OUP இன் அறிவுசார் சொத்துரிமைகளை மீறியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு எந்தவொரு நீதிமன்றத்தையும் அணுகுவதிலிருந்து அதனைத் தடுக்காது.


உரிமையுடைமை நிலை தொடர்பான குறிப்பு

Oxforddictionaries.com மற்றும் அதன் துணைக் களங்களில் வர்த்தகக் குறியீடாக அல்லது பிற முறைகளில் இதே நோக்கம் கொண்ட உரிமை நிலையைக் கொண்டிருக்கும் அல்லது குறிப்பிடும் சொற்கள் இருக்கலாம். அவை இருப்பது, உரிமையுடைமை அல்லாதது அல்லது பொதுவில் குறிப்பிடலாம் அல்லது சட்டப்பூர்வ அந்தஸ்தை மாற்றியுள்ளது என எந்த முடிவையும் பெற்றுள்ளதாகக் கருதக்கூடாது. ஒரு சொல்லானது உரிமையுடைமை நிலையில் இருப்பதாக ஆசிரியர் குழுவில் உள்ள பணியாளர் சில சான்றுகளைக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பங்களில், அந்தச் சொல்லை உள்ளிடும் போதே அதன் நிலையும் குறிப்பிடப்படும், எனினும் அத்தகைய சொற்களின் மீதான சட்டப்பூர்வ அந்தஸ்து அல்லது அதன் மீது மறைமுகமாகத் தீர்மானம் எதுவும் முடிவுசெய்யப்படாது.

OxfordWords வலைப்பூ இடுகைகள் மற்றும் கருத்துகளில் உள்ள அபிப்பிராயங்கள் மற்றும் பிற தகவல்கள், Oxford University Press இன் அபிப்பிராயங்கள் அல்லது நிலைப்பாடுகளைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.