தமிழ் அரசு யின் அர்த்தம்

அரசு

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு நாட்டை அல்லது மாநிலத்தை நிர்வகிக்கும் (அதிகாரங்கள் வரையறுக்கப்பட்ட) அமைப்பு.

  ‘குடும்பக்கட்டுப்பாடுபற்றி அரசின் பிரச்சாரம் பயன் அளித்துள்ளது’

 • 2

  அரசனின் அல்லது அரசியின் ஆட்சி/ஜனநாயக முறையில் ஒரு கட்சி நடத்தும் ஆட்சி.

  ‘நீண்ட காலம் அரசுபுரிந்தவர்’
  ‘இந்த அரசு தொழில் வளர்ச்சியில் ஆர்வம் காட்டும்’

 • 3

  ஒரு துறையில் ‘இணையற்றவர்’ என்ற பொருளில் வழங்கும் பட்டம்.

  ‘கவியரசு’
  ‘இசையரசு’

தமிழ் அரசு யின் அர்த்தம்

அரசு

பெயர்ச்சொல்

 • 1

  அரசமரம்.

  ‘கோயிலைச் சுற்றி ஆல், அரசு போன்ற மரங்கள் காணப்பட்டன’