தமிழ் அரட்டு யின் அர்த்தம்

அரட்டு

வினைச்சொல்அரட்ட, அரட்டி

 • 1

  பிறரைப் பயமுறுத்தும் விதத்தில் சத்தமாகப் பேசுதல்.

  ‘குழந்தையை ஏன் அரட்டுகிறாய்?’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (வளவளவென்று) பேசுதல்; தேவைக்கு அதிகமாகப் பேசுதல்.

  ‘அவர் எப்போதும் நெடுக அரட்டிக் கொண்டேயிருப்பார்’
  ‘அந்தப் பொடியன் எந்த நேரமும் அரட்டிக்கொண்டேயிருப்பான்’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவரைப் போகுமாறு) விரட்டுதல்.

  ‘சும்மா கதைத்துக்கொண்டிருக்காமல், அவளை அரட்டிவிடு’

தமிழ் அரட்டு யின் அர்த்தம்

அரட்டு

வினைச்சொல்அரட்ட, அரட்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (தூங்கிக்கொண்டிருப்பவரை) விழிக்கச்செய்தல்; எழுப்புதல்.

  ‘அவனைத் தூக்கத்திலிருந்து அரட்டிவிடு’
  ‘இரவு ஒருவரையும் அரட்டிவிடாமல் அவன் வெளியே எழுந்து போனான்’
  ‘விடிந்து இவ்வளவு நேரமாகியும் தூங்குகிறானா? அவனை அரட்டிவிடு’