தமிழ் அரைமனது யின் அர்த்தம்

அரைமனது

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    (செயலில்) முழுமனத்தோடு இல்லாமை; ஆர்வம் இல்லாமை.

    ‘கைக்குழந்தையையும் எடுத்துக்கொண்டு கல்யாணத்துக்குக் கிளம்ப அவருக்கு அரைமனதுதான்’
    ‘எல்லோரும் கூலியைப் பற்றிய கவலையில் அரைமனதுடன் வேலை செய்துகொண்டிருந்தார்கள்’