தமிழ் அறிமுகப்படுத்து யின் அர்த்தம்

அறிமுகப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

 • 1

  அறிமுகம் என்ற பெயர்ச்சொல்லின் முதல் ஆறு பொருளிலும் வரும் வினைச்சொல்.

 • 2

  (சட்டப்பேரவையில் அல்லது மக்களவையில் ஒரு மசோதாவை) விவாதத்திற்காகச் சமர்ப்பித்தல்.

  ‘பெண்களுக்கான ஒதுக்கீடு குறித்த மசோதா மக்களவையின் அடுத்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும்’

 • 3

  (கொள்கை, திட்டம் போன்றவற்றை அரசு) அமல்படுத்துதல்.

  ‘1985இல் மிகுந்த விளம்பரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஜவுளிக் கொள்கை தோல்வியடைந்தது’