தமிழ் அலறியடித்துக்கொண்டு யின் அர்த்தம்

அலறியடித்துக்கொண்டு

வினையடை

  • 1

    (ஒன்று ஏற்படுத்தும் பாதிப்பால் அல்லது விளைவால்) பதறிப்போய்; பெரும் பதற்றத்துடன்.

    ‘அம்மாவின் உடல்நிலை திடீரென்று மோசமடைந்துவிட்டது என்னும் செய்தி கிடைத்தவுடன் அலறியடித்துக்கொண்டு கிளம்பினாள்’
    ‘வெள்ளம் வருவதைக் கண்டு மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள்’
    ‘பரீட்சைக்கு நேரமாகிவிட்டதென்று அலறியடித்துக்கொண்டு ஓடினாள்’