தமிழ் இரைப்பு யின் அர்த்தம்

இரைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    இயல்பைவிட அதிக வேகத்தோடு வெளிப்படும் சுவாசம்.

    ‘இரண்டாவது மாடி ஏறும்போது அந்தப் பெரியவருக்கு இரைப்பு வந்துவிட்டது’

  • 2

    (ஆஸ்துமா போன்ற நோயால் ஏற்படும்) மூச்சுத் திணறல்.

    ‘இரவு முழுவதும் அம்மாவுக்கு இரைப்பு நிற்கவேயில்லை’