தமிழ் கனவு யின் அர்த்தம்

கனவு

பெயர்ச்சொல்

 • 1

  தூக்கத்தில் தோன்றும் உணர்வுகள், காட்சிகள் போன்றவை.

  ‘மலையிலிருந்து தலைகுப்புற விழுவதுபோல் கனவு கண்டு திடுக்கிட்டு விழித்தான்’
  ‘விமானத்தில் செல்வதுபோல் ஒரு கனவு’

 • 2

  மனத்தில் வளர்க்கும் எண்ணம்; விருப்பம்.

  ‘திரைப்பட நடிகர் ஆகிவிட வேண்டும் என்பது அவர் கனவு’
  ‘அவளுடைய கனவு வீண்போகவில்லை’

 • 3

  கற்பனை.

  ‘அவர் கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்துவிட்டார்’