தமிழ் கிண்ணம் யின் அர்த்தம்

கிண்ணம்

பெயர்ச்சொல்

  • 1

    சற்றுக் குழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய, பிடி இல்லாத (பெரும்பாலும் உணவுப் பொருள்களை வைப்பதற்குப் பயன்படும்) சிறிய வட்ட வடிவப் பாத்திரம்.

    ‘சப்பாத்திக்கு ஒரு கிண்ணத்தில் குருமாவும் மற்றொரு கிண்ணத்தில் பருப்பும் வைக்கப்பட்டிருந்தன’

  • 2

    (முற்காலத்தில்) பால், மது முதலியன அருந்துவதற்காகப் பயன்படுத்திய (தங்கத்தால் அல்லது வெள்ளியால் ஆன) சிறு குவளை.

    ‘அரசர்கள் பொற்கிண்ணத்தில் மது ஊற்றி அருந்தினர்’