தமிழ் சனி யின் அர்த்தம்

சனி

பெயர்ச்சொல்

 • 1

  சூரியனிலிருந்து ஆறாவதாக உள்ள கிரகம்.

  ‘சனிக் கோளில் உயிர் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை’
  ‘சூரியனிலிருந்து 142.7 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் சனிக் கிரகம் இருக்கிறது’

 • 2

  (மேற்கூறிய கிரகத்தின் பெயர் கொண்ட) வாரத்தின் இறுதி நாள்.

 • 3

  சோதிடம்
  பணியாளர், கடமை உணர்வு, ஆயுள், இருள், கருப்பு நிறம், நீலக் கல், மேற்குத் திசை முதலியவற்றைக் குறிக்கும் கிரகம்.

தமிழ் சீனி யின் அர்த்தம்

சீனி

பெயர்ச்சொல்

 • 1

  வெண்ணிறச் சர்க்கரை.