தமிழ் சித்தரி யின் அர்த்தம்

சித்தரி

வினைச்சொல்சித்தரிக்க, சித்தரித்து

  • 1

    (ஒன்றின் வெவ்வேறு கூறுகளை அல்லது தன்மைகளை மனத்தில் பதியும்படி) வருணித்தல்; (ஒன்றை) விவரித்தல்.

    ‘சுதந்திரப் போராட்டத்தைச் சித்தரிக்கும் வகையில் எடுத்த படம் இது’
    ‘உண்மையைக் கலையாகச் சித்தரிப்பதில்தான் இலக்கிய ஆசிரியரின் திறமை இருக்கிறது’
    ‘காம்போதி ராகத்தை விரிவாகவும் மூன்று ஸ்தாயிகளிலும் நல்ல கற்பனைத் திறனுடனும் அவர் அற்புதமாகச் சித்தரித்தார்’