தமிழ் செருகு யின் அர்த்தம்

செருகு

வினைச்சொல்செருக, செருகி

 • 1

  ஒரு பிடிப்பில் நிற்கும்படி (ஒன்றை) நுழைத்தல் அல்லது திணித்தல்.

  ‘தபால்காரர் கடிதத்தைக் கதவில் செருகிவிட்டுப் போனார்’
  ‘கிழவி முந்தானையை இடுப்பில் செருகிக்கொண்டு கூடையைத் தூக்கினாள்’
  ‘பேனாவைப் பையில் செருகினான்’

 • 2

  (கத்தி, ஈட்டி, முள் போன்றவை) குத்திய நிலையில் இருத்தல்.

  ‘அவர் வீசிய கத்தி மரக்கட்டையில் போய்ச் செருகியது’

 • 3

  இடையில் நுழைத்தல்.

  ‘கம்பராமாயணத்தில் பல பாடல்கள் இடையில் செருகப்பட்டவை என்று சிலர் கருதுகின்றனர்’

 • 4

  (பசி, மயக்கம், வலி முதலியவற்றால்) (கண்) பாவை மேல் இமைக்குள் மறைதல்.

  ‘மயக்க மருந்து அளிக்கப்பட்ட நோயாளிக்குக் கண்கள் செருக ஆரம்பித்தது’
  ‘பசியால் பிச்சைக்காரன் கண்கள் செருக விழுந்துகிடந்தான்’