தமிழ் ஜாடை யின் அர்த்தம்

ஜாடை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (முகபாவம், சைகை முதலியவற்றால்) குறிப்பாகத் தெரிவிக்கும் சொல்.

  ‘மேலதிகாரி கோபமாக இருக்கிறார் என்று கண் ஜாடை காட்டிவிட்டுப் போனான்’
  ‘ஏன் இப்படி உளறுகிறான் இவன் என்று இருவரும் ஜாடையாகப் பார்த்துக்கொண்டனர்’

 • 2

  சாயல்.

  ‘அப்பா ஜாடையில் அண்ணன்; அம்மா ஜாடையில் தம்பி’