தமிழ் தேய்மானம் யின் அர்த்தம்

தேய்மானம்

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு பொருள் மற்றொரு பொருளில் உராய்வதால் அல்லது தேய்க்கப்படுவதால் பொருளுக்கு ஏற்படும் பருமன் குறைந்த நிலை.

  ‘எண்ணெய் போட்டால் சக்கரத்தின் தேய்மானம் குறையும்’
  ‘இந்தப் புதிய நாணயம் தேய்மானம் எதுவுமின்றி 3.5 கிராம் இருக்கும்’
  ‘நகை செய்யும்போது தேய்மானத்தை ஆசாரி கூறிவிடுவார்’

 • 2

  (நிறுவனங்களின் கணக்கில்) அசையும் சொத்தாகக் கருதப்படும் பொருள்களின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் குறையும் போக்கு.

  ‘லாபத்திலிருந்து தேய்மானத்திற்கு உரிய தொகையைக் கழித்துவிட வேண்டும்’
  ‘கணிப்பொறிகளுக்கு அதிகத் தேய்மானம் உண்டு’