தமிழ் தேவலை யின் அர்த்தம்

தேவலை

வினைச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு ஒருவர் அல்லது ஒன்றின் அளவுக்கு மற்றவர் அல்லது மற்றது மோசம் இல்லை என்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல்.

  ‘பட்டினிக்குப் பழைய சோறு தேவலை’
  ‘விடாமல் நச்சரிக்கும் உன்னைவிட அவன் எவ்வளவோ தேவலை’

 • 2

  பேச்சு வழக்கு (கஷ்டமானது அல்லது மோசமானது என்ற நிலையில்) ஒன்று நிகழ்ந்தால் அல்லது இருந்தால் நன்றாக இருக்கும் என்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல்.

  ‘சுட்டெரிக்கும் வெயிலுக்குக் கொஞ்சம் மழை பெய்தால் தேவலை’
  ‘தலைவலிக்குச் சூடாகக் காப்பி குடித்தால் தேவலை’
  ‘இருந்த களைப்புக்குக் கொஞ்சம் படுத்தால் தேவலை போல் இருந்தது’
  ‘ரொம்ப அவசரம், கொஞ்சம் பணம் கொடுத்தால் தேவலை’

 • 3

  பேச்சு வழக்கு (மோசமான நிலையிலிருந்து சற்று) சீர் அடைந்த நிலை.

  ‘நேற்றைவிட இன்று உடம்பு தேவலை’
  ‘குடும்ப நிலைமை இப்போது எவ்வளவோ தேவலை’