தமிழ் பழிகிட யின் அர்த்தம்

பழிகிட

வினைச்சொல்-கிடக்க, -கிடந்து

  • 1

    காரியம் நிறைவேறுவதையே கருத்தாகக் கொண்டு (ஓர் இடத்தில் ஒருவருக்காக நீண்ட நேரம்) காத்திருத்தல்.

    ‘கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று நினைத்து முதல்வர் அறையின் முன் பழிகிடக்கிறார்கள்’
    ‘நடிகர்களைப் பார்ப்பதற்காக அவர்கள் வீட்டு வாசலில் ரசிகர்கள் பழிகிடக்கிறார்கள்’