தமிழ் பூரணம் யின் அர்த்தம்

பூரணம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  முழுமையானது; குறை இல்லாதது.

  ‘பெரியவர் பூரண குணம் பெற்றார்’
  ‘இந்த ஏற்பாட்டில் எனக்குப் பூரண திருப்தி’
  ‘அவருக்குப் பூரண ஓய்வு தேவை’

தமிழ் பூர்ணம் யின் அர்த்தம்

பூர்ணம்

பெயர்ச்சொல்

தமிழ் பூரணம் யின் அர்த்தம்

பூரணம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (கொழுக்கட்டை, சுழியன் போன்றவற்றின் உள்ளே வைக்கப்படும்) தேங்காய்த் துருவலோடு வெல்லம், வேகவைத்த கடலைப் பருப்பு அல்லது பயத்தம் பருப்பு கலந்த கலவை.

  ‘கொழுக்கட்டை செய்வதற்கு முன்பே பாதிப் பூரணத்தைக் குழந்தைகள் தின்றுவிட்டனர்’
  ‘கொஞ்சம் பூரணம் மீந்துபோய்விட்டது’

தமிழ் பூர்ணம் யின் அர்த்தம்

பூர்ணம்

பெயர்ச்சொல்