தமிழ் வாய்திற யின் அர்த்தம்

வாய்திற

வினைச்சொல்-திறக்க, -திறந்து

 • 1

  (எரிச்சலான அல்லது கேலியான தொனியில் கூறும்போது) பேசுதல்.

  ‘மனுஷன் பெண்டாட்டிக்கு எதிரில் வாய்திறந்து நான் பார்த்ததில்லை’
  ‘நாங்கள் எல்லாரும் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தோம். அவன் மட்டும் கடைசிவரை வாய்திறக்கவே இல்லை’

 • 2

  (ஒன்றைப் பற்றி ஒருவர்) கருத்துத் தெரிவித்தல்.

  ‘இந்தப் பிரச்சினையில் நான் வாய்திறக்க விரும்பவில்லை’
  ‘நதிநீர்ப் பங்கீடு பற்றி இதுவரை மௌனமாக இருந்தவர் இப்போதுதான் வாய்திறந்திருக்கிறார்’