தமிழ் வாய்பாடு யின் அர்த்தம்

வாய்பாடு

பெயர்ச்சொல்

 • 1

  பெருக்கல், வகுத்தல் முதலியவற்றிற்குப் பயன்படுத்தும் கணக்கிடப்பட்ட அட்டவணை.

  ‘உனக்கு எட்டாம் வாய்பாடு தெரியுமா?’
  ‘கூட்டல் வாய்பாடு’
  ‘பெருக்கல் வாய்பாடு’
  ‘வாய்பாடு ஒப்பிப்பதுபோல் தான் செய்த செலவுகளைச் சொல்லிக்கொண்டே போனான்’

 • 2

  மாற்றம் இல்லாமல் மரபாகக் கூறிவருவது.

  ‘வறுமையை ஒழிப்போம் என்பது பல அரசியல் கட்சிகளின் தேர்தல் வாய்பாடாகவே இருந்துவருகிறது’

 • 3

  இலக்கணம்
  பலவற்றிற்கு மாதிரியாகக் கொள்ளப்படும் ஒன்று.

  ‘‘வா’ என்பதன் செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சம் ‘வந்து’ என்பதாகும்’
  ‘இந்தச் செய்யுளின் முதல் இரண்டு அடிகளுக்கு அசை பிரித்து வாய்பாடு எழுதுக’

 • 4

  வேதியியல்