தமிழ் வாயைக் கிளறு யின் அர்த்தம்

வாயைக் கிளறு

வினைச்சொல்கிளற, கிளறி

  • 1

    (தனக்கு வேண்டிய தகவலைப் பெறும் ஆர்வத்தோடு ஒருவரை) பேசத் தூண்டுதல்.

    ‘அவர் வாயைக் கிளறினால் மாமாவைப் பற்றி ஏதாவது விவரம் தெரியும் என்று நினைத்தான்’
    ‘அந்த நிருபரின் வாயைக் கிளறியதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன’