தமிழ் வினியோகம் யின் அர்த்தம்

வினியோகம்

பெயர்ச்சொல்

 • 1

  (தண்ணீர், மின்சாரம், உணவுப் பொருள் முதலியவற்றை) இலவசமாக அல்லது விற்பனை செய்வதற்காகப் பகிர்ந்தளிக்கும் செயல்பாடு.

  ‘கோயிலில் சுண்டல் வினியோகம் நடந்துகொண்டிருந்தது’
  ‘நம் பகுதியில் நாளை மின்சார வினியோகம் இருக்காது’
  ‘நியாய விலைக் கடையில் உணவுப் பொருள் வினியோகம்’
  ‘காசநோய்க்கான இலவச மருந்து வினியோகம் அரசு சுகாதார மையங்கள்மூலம் செய்யப்படுகிறது’
  ‘இவர் வெளிநாட்டிலிருந்து பொருட்களை வாங்கிச் சிறு வியாபாரிகளுக்கு வினியோகம்செய்கிறார்’