தமிழ் விருப்பம் யின் அர்த்தம்

விருப்பம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு; ஆசை; நாட்டம்.

  ‘மனைவி விருப்பப்படி வீட்டை வாங்கிவிட்டார்’
  ‘வெளிநாடுகளுக்குச் சென்று சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற விருப்பம் அவனுக்கு உண்டு’
  ‘இந்தப் பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் ஒரு வார காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்’
  ‘தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துக் கட்சித் தலைமையகத்தில் மனு கொடுத்துள்ளார்’
  ‘வாசனைப் பொருள்களில் இவளுக்கு விருப்பம் அதிகம்’
  ‘உங்களின் விருப்பமான பொழுதுபோக்கு என்ன?’
  ‘மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கைத்தொழிலைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்’
  ‘சூதாடுவதில் எனக்கு விருப்பம் இல்லை’
  ‘தமிழைக் கற்று வித்வான் ஆக வேண்டும் என்பது அவருடைய விருப்பம்’
  ‘சிறுவயதிலிருந்தே இசையில் என் மகளுக்கு மிகுந்த விருப்பம் உண்டு’

 • 2

  காதல்; நேசம்.

  ‘அவள்மேல் கொண்ட விருப்பத்தை எப்படி அவளுக்குத் தெரியப்படுத்துவது?’