தமிழ் அக்கடாவென்று யின் அர்த்தம்

அக்கடாவென்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (வேலைக்குப் பிறகு) ஓய்வாக.

    ‘வீட்டு வேலையை முடித்துவிட்டு இப்போதுதான் அக்கடாவென்று வந்து உட்கார்ந்தேன்’

  • 2

    பேச்சு வழக்கு (மற்றவர்கள் விவகாரங்களில்) தலையிடாமல்; சும்மா.

    ‘அக்கடாவென்று இருந்த என்னை வம்பில் மாட்டிவைத்துவிட்டான்’