தமிழ் அக்கப்போர் யின் அர்த்தம்

அக்கப்போர்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (முக்கியமற்ற) சிறு தகராறு; வம்பு.

  ‘அவர் எந்த அக்கப்போரிலும் மாட்டிக்கொள்வதில்லை’
  ‘வாடகை பேசிக்கொள்ளாமல் ஏறி வண்டிக்காரனோடு ஒரே அக்கப்போராகிவிட்டது’

 • 2

  பேச்சு வழக்கு அமளி; தொல்லை.

  ‘பள்ளிக்கூடம் இல்லையென்றால் வீட்டில் குழந்தைகளால் ஒரே அக்கப்போர்’

 • 3

  பேச்சு வழக்கு வெட்டிப் பேச்சு.

  ‘அக்கப்போர் பேசி ஏன் நேரத்தை வீணாக்கிக்கொண்டிருக்கிறாய்?’