தமிழ் அக்கறை யின் அர்த்தம்

அக்கறை

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றில் அல்லது ஒருவர் மேல்) ஈடுபாடு; நாட்டம்.

  ‘இலக்கிய வளர்ச்சியில் ஆழ்ந்த அக்கறை கொண்டவர்’
  ‘படிப்பின் மேல் அவன் காட்டிய அக்கறை!’
  ‘அவள்மீது தேவையில்லாமல் ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறாய்?’

 • 2

  (ஒருவரிடம் கொள்ளும்) கரிசனம்.

  ‘‘இந்தப் பாடம் புரிகிறதா?’ என்று அக்கறையுடன் கேட்டார்’
  ‘வயதாகிப்போன பெற்றோர்களை அக்கறையுடன் பார்த்துக்கொண்டார்’

 • 3

  கருத்து செலுத்துதல்; கவனம்.

  ‘நூல் சிறப்பாக வெளிவருவதற்கு மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார்’
  ‘நான் சொன்ன விஷயத்தில் நீ அக்கறை காட்டவில்லை’