தமிழ் அக்கா யின் அர்த்தம்

அக்கா

பெயர்ச்சொல்

 • 1

  உடன்பிறந்த பெண்களில் தனக்கு மூத்தவள்/உறவு முறையிலான சகோதரிகளில் தனக்கு மூத்தவள்.

  ‘இவள் என் சொந்த அக்கா, அவள் ஒன்றுவிட்ட அக்கா’

 • 2

  வயதில் சற்று மூத்த பெண்ணை மரியாதையுடன் அழைக்க அல்லது குறிப்பிடப் பயன்படுத்தும் சொல்.

  ‘அக்கா! நீங்கள் என் திருமணத்துக்குக் கட்டாயம் வர வேண்டும்’
  ‘மீனாட்சியக்கா’
  ‘கமலாக்கா’