தமிழ் அகதி யின் அர்த்தம்

அகதி

பெயர்ச்சொல்

  • 1

    சமயம், அரசியல் போன்ற காரணங்களால் சமூகத்தில் நிலைமை மோசமாகும்போது தன் நாட்டிலிருந்து வெளியேறி மற்றொரு நாட்டில் அடைக்கலம் தேடுபவர்.

    ‘நாட்டுப் பிரிவினையின்போது அகதிகளாக வந்தவர்களும் உண்டு, அகதிகளாக வெளியேறியவர்களும் உண்டு’

  • 2

    பெருகிவரும் வழக்கு இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்டுப் புகலிடம் தேடுபவர்.

    ‘அமெரிக்காவில் சூறாவளித் தாக்குதலுக்கு உள்ளான நியுஆர்லியன்ஸ் நகரில் அகதிகளாகத் தவித்த ஆயிரக் கணக்கானோர் விமானங்கள் மூலம் வேறு ஊர்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்’