தமிழ் அகந்தை யின் அர்த்தம்

அகந்தை

பெயர்ச்சொல்

 • 1

  இறுமாப்பு; அகங்காரம்.

  ‘தான் மெத்தப் படித்தவன் என்ற அகந்தை அவனிடம் உண்டு’

 • 2

  தன்முனைப்பு.

  ‘இறைவனிடம் செலுத்தும் பக்தி நம் அகந்தையைப் போக்க உதவும் என்று சொல்வார்கள்’

 • 3

  தன்மானம்.

  ‘அவனுடைய அலட்சியம் அவளுடைய அகந்தையைச் சீண்டியது’