தமிழ் அகலப்படுத்து யின் அர்த்தம்

அகலப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (ஓர் இடத்தின், பரப்பின்) அகலத்தைக் கூட்டுதல்; அகலமாக்குதல்.

    ‘கிழக்குக் கடற்கரைச் சாலையை அகலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்றுவருகிறது’
    ‘இந்த நகரின் சாலைகளை இதற்கு மேல் அகலப்படுத்த முடியாது’
    ‘முற்றத்தைக் கொஞ்சம் அகலப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று அப்பா சொல்லிக்கொண்டிருந்தார்’