தமிழ் அகலம் யின் அர்த்தம்

அகலம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (நீளம் அல்லது உயரம் உள்ள ஒன்றில்) இரு பக்கங்களுக்கும் இடையே உள்ள தூரம்.

  ‘இந்தப் பலகையின் நீளம் பத்தடி, அகலம் மூன்றடி’
  ‘நூறு அடி அகலச் சாலை’

 • 2

  சராசரி அகலத்தைவிட அதிகம்.

  ‘அகலமான வீதி’
  ‘அகலமான நெற்றி’
  ‘துணியில் அகலஅகலமான பூக்கள் அச்சிடப்பட்டிருந்தன’
  ‘புதிய கடற்கரைச் சாலை அகலமாகப் போடப்பட்டிருக்கிறது’

 • 3

  குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு அகன்று இருக்கும் பரப்பு.

  ‘ஒரு ரூபாய் அகலத்தில் குங்குமப் பொட்டு’