தமிழ் அகாலம் யின் அர்த்தம்

அகாலம்

பெயர்ச்சொல்

 • 1

  (இரவில்) உரிய நேரம் அல்லாத நேரம்.

  ‘இந்த அகாலத்தில் எந்த மருந்துக்கடை திறந்திருக்கும்?’
  ‘இந்த அகால நேரத்தில் வந்து கதவைத் தட்டுவது யார்?’

 • 2

  (இறப்பு, மூப்பு பற்றிக் குறிப்பிடும்போது) உரிய வயதுக்கும் குறைந்த வயது.

  ‘தன் ஒரே சகோதரன் அகாலத்தில் காலமானது அவருக்குப் பெரும் துயரத்தைத் தந்தது’
  ‘அளவுக்கு மீறிய குடும்பச் சுமையும் கவலைகளும் அவனுக்கு அகாலத்தில் மூப்பைத் தந்துவிட்டன’