தமிழ் அகில யின் அர்த்தம்

அகில

பெயரடை

 • 1

  (நாடு, உலகம் முதலிய சொற்களுக்குப் பெயரடையாக வரும்போது) அனைத்து.

  ‘அகில இந்தியத் தொழிலாளர் சங்கம்’
  ‘அகில இந்திய வானொலி’
  ‘அகில உலகப் புகழ்’

தமிழ் அகில் யின் அர்த்தம்

அகில்

பெயர்ச்சொல்

 • 1

  சிறு துண்டுகளாக வெட்டி நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப்படுவதும் ஒரு வகை வாசனைத் தைலம் தயாரிக்கப் பயன்படுவதுமான (இமயமலைப் பகுதிகளில் வளரும்) மரம்.

 • 2

  வாசனைப் பொருள்கள் தயாரிக்க உதவும் வெள்ளை நிறப் பிசினைத் தருவதும் மரச் சாமான்கள் செய்வதற்குப் பயன்படுத்தப்படுவதுமான (மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வளரும்) ஒரு வகை மரம்.