தமிழ் அங்கீகரி யின் அர்த்தம்

அங்கீகரி

வினைச்சொல்அங்கீகரிக்க, அங்கீகரித்து

 • 1

  ஏற்றுக்கொள்ளுதல்.

  ‘கலப்புத் திருமணம் நகரங்களில் சுலபமாக அங்கீகரிக்கப்படுகிறது’
  ‘பழைய பழக்கவழக்கங்களை அறிவுபூர்வமாக அங்கீகரிக்க முடியவில்லை’

 • 2

  (அரசோ உயர்நிலை அமைப்போ குறிப்பிட்ட செயல்பாடுகளை அல்லது அமைப்புகளை) முறையாக அனுமதித்தல்.

  ‘இந்திய மருத்துவக் குழு அங்கீகரித்த கல்லூரிகளே மருத்துவக் கல்வி அளிக்க முடியும்’
  ‘புதிய பாடத் திட்டத்தைப் பல்கலைக்கழகம் விரைவில் அங்கீகரிக்கும்’
  ‘எங்கள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் மட்டுமே எங்கள் தயாரிப்புகள் கிடைக்கும்’

 • 3

  ஒப்புதல் அளித்தல்.

  ‘குடிநீர்த் திட்டத்தை அரசு விரைவில் அங்கீகரிக்கும்’

 • 4

  ஒரு நாடு மற்றொரு நாட்டின் ஆட்சியைச் சட்டபூர்வமானது என்று ஒப்புக்கொள்ளுதல்.

  ‘சீனா இன்றுவரை தைவான் அரசை அங்கீகரிக்கவில்லை’

 • 5

  (ஒருவருடைய உணர்ச்சிகளுக்கு) மதிப்பு கொடுத்தல்.

  ‘என் உணர்வுகளை அங்கீகரிக்காதவரிடம் நான் எப்படிப் பேசுவது?’
  ‘அவையோரின் பாராட்டை அங்கீகரிக்கும் வகையில் எழுந்து நின்று எல்லோரையும் வணங்கினார்’