தமிழ் அங்கீகாரம் யின் அர்த்தம்
அங்கீகாரம்
பெயர்ச்சொல்
- 1
(அரசு அல்லது உயர்நிலை அமைப்பு, குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கு அல்லது அமைப்புகளுக்குத் தரும்) முறையான அனுமதி.
‘பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் பெற்ற படிப்புகளையே கல்லூரிகள் கற்பிக்க முடியும்’‘அரசின் அங்கீகாரம் பெறாத வேலைவாய்ப்பு நிறுவனங்களை நாட வேண்டாம்’‘அறங்காவலர்களின் அங்கீகாரமின்றி நிலம் விற்கப்பட்டிருக்கிறது’‘இந்தக் கட்சி இன்னும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறவில்லை’ - 2
(ஒரு படைப்பு, சிந்தனைப் போக்கு போன்றவற்றைச் சமூகம்) ஏற்றுக்கொள்ளுதல்.
‘கலப்புத் திருமணங்களுக்கு நம் சமூகம் போதிய அங்கீகாரம் இன்னும் வழங்கவில்லை’‘என் நாவலுக்கு இவ்வளவு பரவலான அங்கீகாரம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை’உரு வழக்கு ‘தேசியப் போட்டியில் பெற்ற வெற்றி இவருடைய திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம்’ - 3
(அரசியல் சட்டத்தின்படி ஒரு மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் தரும்) ஒப்புதல்.
‘மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா குடியரசுத் தலைவரின் அங்கீகாரத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது’