தமிழ் அங்கி யின் அர்த்தம்

அங்கி

பெயர்ச்சொல்

 • 1

  நீண்ட மேலுடை.

 • 2

  (பெரும்பாலும் வைணவக் கோவில்களில்) பெருமாள் விக்கிரகத்தின் மீது சாத்தப்படும், விலை உயர்ந்த கற்கள் பதித்த, தங்கம் அல்லது வெள்ளியால் ஆன கவசம் போன்ற அணி.

  ‘அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவில் உற்சவருக்கு ரத்தின அங்கி அணிவிக்கப்பட்டது’

 • 3

  கிறித்தவ வழக்கு
  கத்தோலிக்கக் குருக்கள் அல்லது அருட்சகோதரிகள் அணியும் நீண்ட உடை.