தமிழ் அங்குமிங்கும் யின் அர்த்தம்

அங்குமிங்கும்

(அங்குமிங்குமாக)

வினையடை

 • 1

  காண்க: அங்கங்கே

 • 2

  ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு/ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு.

  ‘மருத்துவமனையில் பிரசவ அறைக்கு வெளியே அங்குமிங்குமாக நடந்துகொண்டிருந்தார்’
  ‘கல்யாண வீட்டில் ஆட்கள் அங்குமிங்கும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தனர்’
  ‘அங்குமிங்கும் சுழலும் அவள் கண்கள்’
  ‘வலி பொறுக்க மாட்டாமல் சுவரில் தலையைச் சாய்த்து அங்குமிங்கும் உடம்பை அசைத்துக்கொண்டிருந்தான்’