தமிழ் அங்கம் யின் அர்த்தம்

அங்கம்

பெயர்ச்சொல்

 • 1

  முழுமையின் அல்லது ஒரு அமைப்பின் பகுதி.

  ‘ராணுவம் அரசாங்கத்தின் ஓர் அங்கம்’
  ‘இந்தியா ஐ.நா. சபையின் அங்க நாடுதான்’

 • 2

  (நாடகத்தில்) ஒரு பெரும் பிரிவு.

  ‘நாடகத்தின் கடைசி அங்கத்தின் முதல் காட்சி’

 • 3

  மனித உடலுறுப்பு.

  ‘நடிகரின் ஒவ்வொரு அங்க அசைவிலும் நடிப்புத் திறன் வெளிப்பட்டது’

 • 4

  உடல்.

  ‘செய்தியைக் கேட்டதும் அங்கமெல்லாம் பதறியது’