தமிழ் அசடு யின் அர்த்தம்

அசடு

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும் ‘அசட்டு’ எனப் பெயரடையாக வரும்போது) சூழலுக்கு ஏற்றபடி நடந்துகொள்ளத் தெரியாத (கேலிக்குள்ளாகும் வகையிலான) தன்மை.

  ‘இந்த அசட்டுக் கேள்விக்கு என்ன பதில் சொல்ல?’
  ‘அவன் முகத்தில் ஒரு அசட்டுக்களை’

 • 2

  (பெரும்பாலும் ‘அசட்டு’ எனப் பெயரடையாக வரும்போது) அடிப்படையோ காரணமோ இல்லாமல் ஏற்படுவது; அர்த்தமற்றது.

  ‘வேஷம் வேண்டாம், அசட்டுக் கௌரவம் வேண்டாம்’
  ‘குழந்தை பிறந்தால் சரியாகிவிடும் என்ற அசட்டு நம்பிக்கை’

 • 3

  நிலைமைக்கு ஏற்றபடி நடந்துகொள்ளவோ பேசவோ தெரியாதவன்/-ள்; முட்டாள்.

  ‘அவன் ஒரு அசடு’
  ‘அந்த அசடையா கடைக்கு அனுப்பினாய்?’