தமிழ் அசட்டை யின் அர்த்தம்

அசட்டை

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    (ஒருவரை அல்லது ஒன்றைப் பொருட்படுத்தாத) புறக்கணிப்பு; அலட்சியம்; கவனக்குறைவு.

    ‘நீ அவரை அசட்டை செய்துவிட்டாய் என்று அவருக்குக் கோபம்’
    ‘தன்னை யார் என்ன செய்துவிட முடியும் என்ற அசட்டை அவனிடம் காணப்பட்டது’
    ‘பாலை அடுப்பில் வைத்துவிட்டுச் சற்று அசட்டையாக இருந்துவிட்டேன், பொங்கி வழிந்துவிட்டது’