தமிழ் அசந்தர்ப்பம் யின் அர்த்தம்

அசந்தர்ப்பம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  எதிர்பாராத பிரச்சினை.

  ‘வீட்டில் ஒரு அசந்தர்ப்பம்; அதனால் வரத் தாமதமாகிவிட்டது’
  ‘நீங்கள் கவனமாக இருந்தால் அசந்தர்ப்பம் எதுவும் நிகழாது’

 • 2

  (சூழ்நிலைக்கு) பொருத்தமற்றது.

  ‘அசந்தர்ப்பமாக நீ எதுவும் பேசிவிடாதே, காரியம் கெட்டுவிடும்’
  ‘அறையில் அவர்கள் இருவரும் தனித்திருக்கும்போது அசந்தர்ப்பமாக நுழைந்துவிட்டேன்’

 • 3

  பேச்சு வழக்கு (நேரடியாகக் குறிப்பிட விரும்பாதபோது) சாவு; இழவு.

  ‘உறவுக்காரர் வீட்டில் ஒரு அசந்தர்ப்பம் நடந்துவிட்டது’