தமிழ் அசல் யின் அர்த்தம்

அசல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  போலி அல்லாதது; உண்மையானது.

  ‘அசல் பட்டத்து ராணியின் மைந்தர்கள்’
  ‘இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் அசல் பக்தர் ஆனார்’

 • 2

  (பிரதியை உருவாக்க ஆதாரமாக அமையும்) மூலம்.

  ‘இந்தப் படம் நகல்தான்; ஆனால் அசல்போலவே இருக்கிறது’
  ‘அசல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்போல அரங்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள்’

 • 3

  இயல்பாக ஒன்றுக்கு உரிய எல்லாத் தன்மைகளையும் கொண்டது.

  ‘இது அசல் தஞ்சாவூர் காப்பி’
  ‘நான்கு சண்டைக் காட்சிகள், ஐந்து பாட்டுகள் என்று ஒரு அசல் தமிழ்ப் படத்தை எடுத்திருக்கிறார்’

 • 4

  கலப்படமற்றது; சுத்தமானது.

  ‘இனிப்புப் பண்டங்கள் அசல் நெய்யால் செய்யப்பட்டவை’

 • 5

  வட்டிக்குக் கடனாக வாங்கிய தொகை; முதல்.

  ‘அசலும் வட்டியும் சேர்ந்து கடன் பத்தாயிரம் ரூபாய் ஆகிவிட்டது’