தமிழ் அசாதாரணம் யின் அர்த்தம்

அசாதாரணம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  வழக்கமானதிலிருந்து வேறுபட்டது.

  ‘மாரடைப்பு நோய் ஏற்பட்ட சில நாட்களில் அசாதாரணமாகச் சில மாற்றங்கள் தோன்றும்’
  ‘அந்த நாணயங்கள் நிறத்திலும் கனத்திலும் அகலத்திலும் அசாதாரணமாக இருந்தன’

 • 2

  பொதுவானதைவிடச் சிறப்பானது; சாதாரணத்துக்கு மேற்பட்டது.

  ‘அவர்களுடைய நட்பு அசாதாரணமானது’
  ‘வானம் அசாதாரணத் தெளிவுடன் இருந்தது’
  ‘அசாதாரணமான மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டார்’

 • 3

  (கிடைப்பது அல்லது காண்பது) அரிது; அபூர்வமானது.

  ‘இது ஓர் அசாதாரணமான அழகு’