அசை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அசை1அசை2அசை3

அசை1

வினைச்சொல்அசைய, அசைந்து, அசைக்க, அசைத்து

 • 1

  (மேலும் கீழும் அல்லது பக்கவாட்டில் மென்மையாக) ஆடுதல்.

  ‘காற்றில் கிளைகள் அசைகின்றன’
  ‘அவர் நாற்காலியில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தார்’

 • 2

  நகர்தல்; நகர்ந்து இடம்பெயர்தல்.

  ‘அவர் தேர் மாதிரி அசைந்து போகிறார்’
  ‘படுக்கையில் அசையாமல் படுத்திருந்தான்’

 • 3

  (பெரும்பாலும் எதிர்மறையில்) (முடிவிலிருந்து அல்லது கொள்கையிலிருந்து) மாறுதல்.

  ‘அம்மா எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் அப்பா அசையவில்லை’

 • 4

  (உடலில் சில உறுப்புகள்) மேலும் கீழுமோ பக்கவாட்டிலோ இயங்குதல்.

  ‘தாடை அசையாமல் பேச முடியாது’

அசை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அசை1அசை2அசை3

அசை2

வினைச்சொல்அசைய, அசைந்து, அசைக்க, அசைத்து

 • 1

  ஆட்டுதல்.

  ‘கம்பத்தை அசைத்துப் பிடுங்கினார்கள்’
  ‘சம்மதத்துக்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான்’
  ‘குடியரசுத் தலைவரைக் குழந்தைகள் கொடி அசைத்து வரவேற்றனர்’

 • 2

  (ஒரு பொருளை) இடம்பெயரச் செய்தல்.

  ‘இந்தக் கனமான பெட்டியை ஒரு ஆளால் அசைக்க முடியாது’

 • 3

  (உடலில் சில உறுப்புகளை) மேலும் கீழுமோ பக்கவாட்டிலோ ஆட்டுதல் அல்லது இயக்குதல்.

  ‘கைகால்களை அசைக்க இடமில்லை’

 • 4

  (நம்பிக்கையை, உறுதியை) குலைத்தல்.

  ‘அவருடைய உறுதியை அசைக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டது’
  ‘என்னை எவனும் அசைக்க முடியாது’

அசை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அசை1அசை2அசை3

அசை3

பெயர்ச்சொல்

 • 1

  (யாப்பில்) எழுத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட அலகு.

  ‘‘அகர’ என்பது இரண்டு அசைகள் கொண்ட சீராகும்’