தமிழ் அசைபோடு யின் அர்த்தம்

அசைபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (மாடு, மான் போன்ற சில விலங்கினம்) இரைப்பையிலிருந்து உணவை மீண்டும் வாய்க்குக் கொண்டுவந்து தொடர்ந்து மெல்லுதல்.

    ‘மாடுகள் வைக்கோலை அசைபோட்டபடி படுத்துக்கிடந்தன’

  • 2

    (நிகழ்ச்சிகளை) மீண்டும்மீண்டும் சிந்தித்தல்; பழைய நினைவுகளில் ஆழ்தல்.

    ‘பழைய நிகழ்ச்சிகளை அசைபோட்டவாறு நடந்தேன்’