தமிழ் அஞ்சு யின் அர்த்தம்

அஞ்சு

வினைச்சொல்அஞ்ச, அஞ்சி

 • 1

  பயப்படுதல்.

  ‘யானையைக் கண்டு சிறுவன் அஞ்சி நடுங்கினான்’
  ‘போராட்ட வீரர்கள் சிறைவாசத்துக்கு அஞ்சுவது இல்லை’

 • 2

  விரும்பத்தகாதது நடந்துவிட்டதை அல்லது நடந்து விடக்கூடும் என்பதைத் தெரிவிக்கும்போது பயத்தை அல்லது கவலையை வெளிப்படுத்துதல்.

  ‘விபத்தில் குறைந்தது நூறு பேராவது இறந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது’
  ‘நான் இவ்வளவு சொல்லியும் அவர் செய்யமாட்டார் என்று அஞ்சுகிறேன்’