அடக்கம்செய் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அடக்கம்செய்1அடக்கம்செய்2

அடக்கம்செய்1

வினைச்சொல்-செய்ய, -செய்து

  • 1

    இறந்தவரின் உடலைக் குழியில் வைத்து மூடுதல்; புதைத்தல்.

    ‘மறைந்த அரசியல் தலைவரின் உடல் நாளை மாலை அடக்கம்செய்யப்படும்’
    ‘கொலை என்று சந்தேகப்படுவதால் அடக்கம் செய்த உடலைக் காவல்துறையினர் தோண்டி எடுத்தனர்’

அடக்கம்செய் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அடக்கம்செய்1அடக்கம்செய்2

அடக்கம்செய்2

வினைச்சொல்-செய்ய, -செய்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (வேறு ஒருவரின் சொத்தைப் பறித்து) தனதாக்கிக்கொள்ளுதல்.