தமிழ் அடக்கு யின் அர்த்தம்

அடக்கு

வினைச்சொல்அடக்க, அடக்கி

 • 1

  (சிரிப்பு, கோபம், பேச்சு முதலியவற்றை) வெளிப்படாமல் தடுத்தல் அல்லது கட்டுப்படுத்துதல்.

  ‘அவளால் அழுகையை அடக்க முடியவில்லை’
  ‘மூச்சை அடக்குவதற்குப் பயிற்சி வேண்டும்’
  ‘சிறுநீரை அடக்கிவைக்கக் கூடாது’

 • 2

  கட்டுக்குள் இருக்கும் வகையில் செய்தல்.

  ‘இந்தக் கட்டுரையை ஒரு பக்கத்துக்குள் அடக்க முடியுமா?’

 • 3

  பணிய வைத்தல்; ஒடுக்குதல்.

  ‘இந்தப் பேட்டையில் ரௌடிகளை யாராலும் அடக்க முடியவில்லை’
  ‘யானையை அடக்க மாவுத்தனால்தான் முடியும்’

 • 4

  (வாய்க்குள்) வைத்திருத்தல்.

  ‘வாயில் அடக்கிக்கொண்டிருந்த புகையிலையைத் துப்பினான்’